Newskadai.com
அரசியல்

இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம்?… தொடரும் நீட் தேர்வு தற்கொலையால் தலைவர்கள் கொந்தளிப்பு…!!

Share this:

நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, தருமபுரி மாணவன் ஆதித்யா என ஒரே நாளில் இரு தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி இருப்பது தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனிதா தொடங்கி ஜோதி ஸ்ரீ துர்கா வரை அஞ்சலி செலுத்துவதோடு எல்லாமும் முடிந்துவிடுகிறதா? அவர்கள் நம் வீட்டு குழந்தைகள் இல்லையா? பயமாக இருக்கு என எழுதி வைத்து இறந்திருக்கிறார் ஜோதி ஸ்ரீதுர்கா.

மாணவர்களே, தைரியமாக இருங்கள்! உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்!

திமுக ஆட்சியில் #NEET ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும்.

எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்; இது உறுதி! – என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே. காவல்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் ? – என திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

Udayanithi

‘ஃபெயிலாயிடுவேனோனு பயமா இருக்கு’ நீட் பயத்தால் தற்கொலைசெய்த மதுரை ஜோதிஸ்ரீ எழுதிய கடிதம் இது. தமிழக மாணவர்களை இப்படி பயத்துக்குள்ளாக்கி மருத்துவம் படிக்கவிடாமல்தடுப்பதும், ‘பிள்ளைகள் உயிரோடிருந்தாலே போதும்’ என பெற்றோரை நினைக்கவைப்பதுமே மோடி-எடப்பாடி சாதனைதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

Thirumurugan gandhi

நீட் எழுதாத மருத்துவர்களே கொரொனோவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்…. நீட் எழுதாதவரே சுகாதார அமைச்சராக இருக்கிறார்…
நீட் எழுதாத மருத்தவரே சுகாதார செயலராக இருக்கிறார்… எனில் அதிமுக அரசு நீட்டை நீக்காமல் பாஜகவிற்கு ஏன் அடிமை சேவகம் செய்கிறது? – மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி

Kamal

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?. மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை! – மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன்

நீட் தேர்வுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதே, மாணவ – மாணவிகளுக்கு நிரந்தர தீர்வு – தயாநிதி மாறன், எம்.பி

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலைகள் செய்து கொள்வதற்கு மத்திய அரசே காரணம் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

#தீர்வு?:மாணவி ஜோதி துர்கா மாய்ந்தார். நீட் கொடுமைக்கு தீர்வே இல்லையா?நாட்டை ஆளுவோருக்கு நெஞ்சில் ஈரமே இல்லையா? ஆதிக்க வெறியர்கள் அடம் பிடிப்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா?மோடிஅரசே நீட் தேர்வைக் கைவிடு! மருத்துவக் கல்வி தொடர்பாக மாநில அரசுகளே முடிவு செய்யட்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

Mutharasan

இளம் தலைமுறையை அழித்தொழித்து வரும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் – இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

Balakrishnan

கொரோனா காலத்தில் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்ற மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. இதைக்கண்டும் காணாது போல் இருக்கும் மாநில அராசின் நடவடிக்கையும் ஏற்புடையதல்ல – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.


Share this:

Related posts

திமுகவின் முக்கிய பொறுப்பு யாருக்கு?

THAVAMANI NATARAJAN

அதிர்ச்சியில் அதிமுக தலைமை… ஒரே நாளில் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா…!

AMARA

5 நதிகளை தூய்மைப்படுத்த அதிரடி திட்டம்…. மத்திய அரசின் புதிய அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

“தேனி மக்களின் கனவை நிறைவேற்றியே தீருவேன்”… மண்ணின் மைந்தன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. உறுதி…!!

AMARA

பிறந்தநாள் கொண்டாட்டம்… கட்சி தொண்டர்களுக்கு கேப்டன் போட்ட அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI