Newskadai.com
இந்தியா

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடந்தே தீரும்… தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

Share this:

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபடாமல் இருக்கின்றன. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக இவ்விரு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

11 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்துள்ளது. தேர்வை தள்ளி வைப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள்.

கொரோனாவால் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது என்று கூறியுள்ளனர். அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்து தான் ஆக வேண்டும் என்றும், ஓராண்டை இழப்பதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனரா? – என்றும் கேள்வி எழுப்பினர். இதனால் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.


Share this:

Related posts

கொரோனா வைரஸ் போயே போச்சு.!! பாஜக தலைவரின் அதிரடி பேச்சு…!!

MANIMARAN M

“விவசாயத்தை காப்பாற்றுங்கள்”…. கண்ணியமான கோரிக்கையை கலவரமாக்கிய போலீசார்… விவசாயிகள் மீது வன்முறை தாக்குதல்…!!

MANIMARAN M

“இந்தியா கலாச்சாரத்தில் இருந்து இந்தியை நீக்கவே முடியாது”… மார்தட்டிக்கொள்ளும் அமித் ஷா, மோடி…!!

NEWSKADAI

“கடலுக்கு அடியில் 2300 கிலோ மீட்டர் நீளத்திற்கு கண்ணாடி இழை கேபிள்” அந்தமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர்.

MANIMARAN M

இரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து..ஒருவர் பலி…! மூவர் படுகாயம்…!

MANIMARAN M

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M