Newskadai.com
தேர்டு ஐ

நண்பனை வைத்து இன்னொரு நண்பனை காலி செய்த பிஜேபி… – பீகார் தேர்தல் தந்திரம்..!!!

bihar
Share this:

ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சியும் மத்தியில் ஆளும் பாஜக உடன் கூட்டணியிலேயே இருந்து வருகிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார். அவருடைய மகன் சிராக் பாஸ்வான் கட்சித் தலைமைக்கு வந்தார். ஜேடியு கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ் குமாருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அல்லது தோன்ற வைக்கப்பட்டன. இதன் விளைவாக மத்தியில் பிஜேபியுடன் கூட்டணியில் இருந்த இருவரும் மாநிலத்தில் எதிரெதிராக நின்றனர். பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜே டி யு கட்சியும் பிஜேபியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

bihar

இவர்களுக்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் , காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்தது. லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் ஒரு புதுவிதமான நிலைப்பாட்டை எடுத்தார். அதாவது அவர் பிஜேபி கூட்டணியிலும் இல்லை மெகா கூட்டணியிலும் இல்லை . ஆனால் நிதிஷ்குமார் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக ஜே டி யு கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தினார். சிராக் பாஸ்வானின் இந்த முடிவிற்கு பிஜேபியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காரணம் அவரது இந்த முடிவினால் பிஜேபிக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படப்போவதில்லை அப்படியே இழப்பு ஏற்பட்டாலும் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சிக்குத்தான் இழப்பு ஏற்படும். ஒருவகையில் அதுவும் நமக்கு சாதகமானதே என்று கணக்கு போட்ட பிஜேபி தலைமை சிராக் பாஸ்வான் முடிவுக்கு பச்சைக்கொடி காட்டியது. மூன்று கட்டமாக நடந்த தேர்தல் முடிவில் சிராக் பாஸ் வானின் லோக் ஜன சக்தி கட்சி ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

bihar

மேலும் படிக்க : கோவை வேளாண் விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு விருது..!!!

ஆனால் பீகாரை ஆளும் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சி 30 இடங்களில் தோல்வியடைய காரணமாக இருந்திருக்கிறார். சராசரியாக 5 சதவீத வாக்குகளை பிரித்திருக்கிறார் கூட்டணிக் கட்சியான பிஜேபி 75 இடங்களில் வென்றிருக்கிறது. ஆனால் நிதிஷ்குமார் கட்சி வெறும் 43 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. ஒரு நண்பனை வைத்து இன்னொரு நண்பனின் காலி செய்திருக்கிறது பிஜேபி. தமிழக சட்டசபை தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே பிஜேபியின் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிஜேபி கையாளப் போகும் யுத்திகளை காண தமிழக அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும், பார்வையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் காத்திருக்கின்றனர்.


Share this:

Related posts

சிறுகதை : காளியான பெருமாள்…

NEWSKADAI

சிறுகதை : கண்காணிக்கப்படும் “பட்டு”

NEWSKADAI

இந்திய தத்துவம் சிறிய அறிமுகம் : நான்கு வேதங்கள் குறித்து முக்கிய தகவல்கள்…!

NEWSKADAI

நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் : தமிழகத்தைக் காக்க வேண்டிய கட்டம்…

NEWSKADAI

அழிவின் விளிம்பில் யானை எனும் பேருயிரி… பாதுகாக்க மறந்த மனித இனம்…!!

MANIMARAN M

இந்தியத் தத்துவம் – யசூர் வேத சம்கிதை

NEWSKADAI