Newskadai.com
சினிமா

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்… எந்த கோவிலில் நடக்கப்போகுது தெரியுமா?

Share this:

கோலிவுட் நாயகிகளிலேயே அதிகம் சம்பளம் பெறுவர் நயன்தாரா.ஐயா படத்தில் ஆரம்பித்து பிகில் வரையிலும் நயனுக்கான மவுசு இன்னும் குறையவில்லை, மாறாக ராக்கெட் வேகத்தில் மார்க்கெட் எகிறியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் நயன், திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் தனது கெத்தை நிரூபித்துள்ளார்.

சிம்பு, பிரபுதேவா, விக்னேஷ் சிவன் என யாருடன் காதலில் இருப்பதையும் நயன்தாரா ஒளித்து மறைத்து கண்ணாமூச்சி விளையாடியது கிடையாது. தற்போது கூட இயக்குநர் விக்னேஷ் சிவனுடன், நயன்தாரா ஒரே வீட்டில் தான் வசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 5 வருடங்களாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nayanthara

மேலும் படிக்க: http://காதலர் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இவ்வளவு பெரியவங்களா?…. வெளிச்சத்திற்கு வந்த சங்கதி…!!

நயன்தாராவிற்கு 7 வருடங்களுக்கு முன்பிருந்தே திருமண தோஷம் உள்ளதாம், அதனால் தான் அடுத்தடுத்து காதல் தோல்விகளை சந்தித்ததாக அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியுள்ளாராம். அதனால் திருமண தோஷம் நீங்க வேண்டும் என்றால் பல இந்து கோவில்களுக்கும் சென்று வழிபாட வேண்டும் என்பதால் தான் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

மேலும் படிக்க: http://பொங்கி வரும் காவிரியைப் போல்… குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க ஆடிப்பெருக்கில் இதை கட்டாயம் செய்யுங்கள்…!!

தற்போது அந்த தோஷம் விலகியுள்ள நிலையில் திருநாகேஸ்வரம் கோவிலில் வைத்து விக்னேஷ் சிவனை கரம் பிடிக்க நயன்தாரா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லாக்டவுன் நேரத்தில் எளிமையாக திருமணத்தை நடத்திக்கொள்ள விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

கொலையா? தற்கொலையா?… சிபிஐ கைக்கு போன சுஷாந்த் மரண வழக்கு…!!

MANIMARAN M

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினுக்கு கொரோனா… கலக்கத்தில் கோலிவுட்…!!

AMARA

வேடந்தாங்கல் விவசாயியாக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்… பிறந்த நாள் ஸ்பெஷல் தகவல் இதோ…!

NEWSKADAI

கமல் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய சீமான்… என்ன இப்படி சொல்லிட்டாரு…!!

NEWSKADAI

அதிக சம்பளம் கேட்டு அடம்பிடித்த நயன்தாரா… அலறியடித்து ஓடிய பிரபல தயாரிப்பாளர்…!!

THAVAMANI NATARAJAN

பிக்பாஸ் சீசன் 4-யை தொகுத்து வழங்குவாரா கமல்?…. போட்டியாளர்கள் பட்டியலைப் பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்…!!

AMARA