Newskadai.com
சினிமா

நயன்தாரா பட தயாரிப்பாளருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

Share this:

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா தொற்றுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்று, தற்போது நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். கடந்த ஒருமாதமாகவே சிகிச்சை பெற்று அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பிசியோதெரபி சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னனி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இவர் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான தேவி, போகன், எல்கேஜி, கோமாளி உள்ளிட்ட படங்கள் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்- கமல் ஹாசன் இணைந்துள்ள இந்தியன் 2 படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா முதன் முறையாக அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இவர் தான் தயாரித்துள்ளார். அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐசரி கணேஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென திரையுலகினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.


Share this:

Related posts

தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகும் “ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்…” “ஹிந்தி தெரியாது போடா”

MANIMARAN M

“வடிவேல்” பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…. நிதியுதவி…!!

THAVAMANI NATARAJAN

“10 லட்சம் குடும்பத்தை காப்பாத்துங்க”… முதல்வரிடம் கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

ஆசிர்வாதம் கிடைத்தது… அற்புதம் நடந்தது… ரஜினி குரலைக் கேட்டு புத்துயிர் பெற்ற ரசிகர்…!

THAVAMANI NATARAJAN

கண்ணில் கனல் தெறிக்கும் கமல்… வெளியானது “பிக்பாஸ் சீசன் 4” ப்ரோமோ வீடியோ…!!

AMARA

இசை ஞானிக்கே இப்படியொரு பரிதாப நிலையா?…. இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது புகார்…!!

NEWSKADAI