காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தீயாய் வேலை செய்ய ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் இந்த நிறுவனம் கூழாங்கல் என்ற படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. புதுமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மிகவும் எளிமையான படமாக இருந்தாலும் ஆழமான கதைக்களம் என்பதால் இந்த படத்தை சர்வதேச அளவிலான விருது விழாக்களில் பங்கேற்க வைக்க நயனும் – விக்கியும் முடிவு செய்திருந்தனர்.
சமீபத்தில் நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், டைகர் பிரிவில் போட்டியிட இந்தப் படம் தேர்வானது. இதற்காக ஓட்டுமொத்த படக்குழுவுடன் நயன்தாரா பட்டுப்புடவையிலும், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் வேட்டி, சட்டையிலும் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றது ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. நயன் – விக்கியின் இந்த முயற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் பிரிவில் விருதை வென்ற முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமை கூழாங்கல் படத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் ஓட்டுமொத்த படக்குழுவோடு சேர்த்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் செம்ம ஹேப்பி அண்ணாச்சி….!