Newskadai.com
கேலரி

மாமியார் வீட்டில் ஓணம் கொண்டாட்டம்… நயன்தாராவுடன் படு ரொமான்ஸாக விக்னேஷ் சிவன்… வைரல் கிளிக்ஸ்…!

Share this:

 

தமிழ் திரையுலகின் டாப் ஹீரோயினான நயன்தாரா, கடந்த 5 வருடங்களாகவே இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் கசிந்துருகுவது அனைவரும் அறிந்த செய்தி தான்.

 

2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய “நானும் ரெளடி தான்” படத்தில் நடித்த போது பற்றிய காதல் 5 ஆண்டுகளாக அணையாமல் கொளுந்து விட்டு எரிகிறது.

 

மற்ற காதலர்களை போல் இல்லாமல் விக்னேஷ் சிவன் நயன்தாராவை தங்கமே, செல்லமே என பாராட்டி தள்ளுவதும், அவருடைய அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சப்போர்ட்டாக இருப்பதும் பிற இளம் நடிகைகளுக்கு வயிற்றெரிச்சலை கூட கிளப்பி இருக்கும் .
படப்பிடிப்பு டூ ஃபாரின் டூர் வரை விக்கி இல்லாமல் நயன் ஒரு அடி கூட எடுத்து வைப்பது இல்லை. சென்னையில் கூட இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

 

எங்கு சென்றாலும் காதலி நயனை பிரியாத விக்கி, அங்கு தாங்கள் ஜாலியாக சுற்றுவதை விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

 

அப்படி ஓணம் கொண்டாடுவதற்காக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனி விமானம் மூலம் கொச்சி சென்றடைந்த போட்டோஸ் காலை முதலே சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

தனி விமானத்தில் சொகுசாக கொச்சி சென்றடைந்த விக்கி, அங்கு ஜாலியாக மாமியார் வீட்டில் ஓணம் கொண்டாடி வருகிறார். அந்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செம்ம ரொமாண்டிக்காக இருக்கும் அந்த போட்டோஸைப் பார்த்து மனுஷன் வாழுறாருய்யா? என நெட்டிசன்களுக்கு லைட்டாக வயிற்றெரிச்சலே வர ஆரம்பித்துவிட்டது.

 

ஓணம் புடவையில் நயன்தாரா, பட்டு வேட்டி, சட்டையில் விக்னேஷ் சிவன் என பார்க்க புதுமண தம்பதி போல் இருவரும் ஜொலிக்கிறார்கள்.

 

Nayanthara
மாமியார் வீட்டில் ஜம்முனு ஓணம் கொண்டாடும் மாப்பிள்ளை விக்கி…

 


Share this:

Related posts

நயன்தாரா, த்ரிஷா, அமலா பால், சாய் பல்லவி… கோலிவுட்டின் டாப் ஹீரோயின்களின் அம்மாக்களை பார்த்திருக்கீங்களா?

POONKUZHALI

“எப்படி இருந்த நான்… இப்படி ஆகிட்டேன்”… இளம் ஹீரோக்களை மிரள வைத்த மனோபாலா… லேட்டஸ்ட் போட்டோஸ்…!!

AMARA

சீரியல் நடிகை ஷிவானியா இது?…. ஹோம்லி டூ மார்டன் லுக்கில் மனதை மயக்கும் போட்டோஸ்…!

NEWSKADAI

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

நயனை அடுத்து கீர்த்தி… தனது செல்லத்துடன் அடித்த லூட்டி… ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்…!!

AMARA

கோகுலாஷ்டமியில் கண்ணன் ராதையாக மாறிய குழந்தைகள்… க்யூட் போட்டோஸ்

THAVAMANI NATARAJAN