Newskadai.com
தேர்டு ஐ

நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் : தமிழகத்தைக் காக்க வேண்டிய கட்டம்…

Share this:

தமிழகத்தில் ஆண்டு தோறும் நமக்கு போதுமான தண்ணீர், பருவமழை மூலம் கிடைக்கின்றது என்பது, சராசரியாக ஆண்டிற்கு 177 டி .எம்.சி. தண்ணீர் பயனற்று கடலுக்குள் கலக்குகின்றது என்ற தமிழக அரசின் புள்ளி விபரம் மூலம் தெளிவாகிறது என்று நீர் வழிச்சாலை திட்ட வடிவமைப்பாளரும், அதன் பொறியாளருமான ஏ.சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளாவில் நல்ல மழை பெய்து வருவதால், அதன் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நமக்கு கிடைக்க இருக்கும் மழை நீரை சேமிக்க, அதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நவீன நீர் வழிச்சாலைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர் ஆதார வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

நீர் வழிச்சாலை திட்ட பொறியாளர் ஏ.சி.காமராஜ் கூறுகையில், ஆண்டுதோறும் நமக்குக் கிடைக்கும் வெள்ள நீரைத் தேக்கி உபயோகிக்க இருக்கின்ற நீர்நிலைகளை மேம்படுத்துவதோடு புதிய நீராதாரங்களை உருவாக்க வேண்டும். அதற்காக கொடுக்கப்பட்டது தான் தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத் திட்டம். இது கங்கா – குமரி தேசிய நீர்வழிச்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறுகிறார்.

மேலும், காமராஜரின் ஆட்சியில் தமிழகத்தில் 17 அணைகள் கட்டப்பட்டன. அதிகளவில் மின்சாரம் கிடைத்தது. தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை எனும் ஒரு திட்டத்தில் மட்டுமே இந்த அணைகள் அனைத்திலும் தேக்கும் அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும், அதிக அளவு மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறினார்.

அஇஅதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத்திட்டம் நிறைவேற்றப்படும் என கூறியிருந்தது. அதனை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.சி.காமராஜ் வலியுறுத்தியுள்ளார்.


Share this:

Related posts

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : நாசதீய சூக்தம்

NEWSKADAI

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக தான் மத்திய அரசு புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிவிக்கையை (EIA2020) அவசர அவசரமாகக் கொண்டு வந்ததா???

POONKUZHALI

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : யசூர் வேத சம்கிதை

NEWSKADAI

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : ஆரண்யகங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI

அழிவின் விளிம்பில் யானை எனும் பேருயிரி… பாதுகாக்க மறந்த மனித இனம்…!!

MANIMARAN M

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : சாம வேத சம்கிதை

NEWSKADAI