மத்திய அரசின் பலவகையான துறைகளுக்கு தேவையான பணியாளர்களை நியமிப்பதற்கு அந்ததந்த துறைகள் அதற்கான தேர்வுகளை நடத்துகின்றனர். விண்ணப்பம் போடுபவர்கள் அதிக அளவிலான ஆள்தேர்வு முகமைகளுக்குக் கட்டணம் செலுத்துவதுடன், தேர்வுகளை எழுத நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது, இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது. அதுமட்டுமின்றி தேர்வு நடத்துவதற்கான மையங்கள் ஏற்பாடு செய்வதில் சட்டம் ஒழுங்க பாதுகாப்பு தொடர்பான பல வகையான பிரச்சனைகளும், தேர்வு மையங்களுக்கு இது சுமையாகவும் உள்ளது.
இதனை நினைவில் கொண்டு மத்திய அரசு இதற்கான மாற்று திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்த வகையில் தேசிய பொது தகுதித் தேர்வு நடத்துவதாகவும் அதில் 12 மொழிகளில் எழுதவும், விண்ணப்பதாரர்கள் ஒரு முறை தேர்வு எழுதிய பிறகு அனைத்து வகையான ஆள்தேர்வு முகமைகளுக்கும் விண்ணப்பிக்க முடியும் இவ்வாறான சலுகைகளை கொண்டுள்ளது.


மேலும் படிக்க:http://நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!
இதோடு என்.ஆர்.ஏ அமைப்பானது தேர்வு முறையை மூன்றாக பிரித்துள்ளது. அதில் எஸ்.எஸ்.சி ., ரயில்வே ஆள்தேர்வு வாரியங்கள், மற்றும் ஐ.பி.பி.எஸ் சார்பில் நடத்தப்படும் பட்டதாரி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற மூன்று நிலைகளில் தொழில் நுணுக்கம் அல்லாத பணிகளுக்கான பொது தகுதித்தேர்வுகளை நடத்த உள்ளது.மேலும் நிலை 2 மற்றும் 3 ஆள்தேர்வு முறைகளின் அடிப்படையில் அந்தந்த ஆள்தேர்வு முகமைகள் ஆள் சேர்க்கைப் பணிகளை தொடரும். இந்த தேர்வுக்கான பாடங்கள் பொதுவானதாகவும், தரநிலைப் படுத்தியதாகவும் இருக்கும்.