Newskadai.com
சினிமா

“பிஎம் நரேந்திர மோடி” – அக்டோபர் 15-ல் செகண்ட் ரிலீஸ்

Share this:

அக்டோபர் 15-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா (covid – 19) தொற்று காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் இதுநாள்வரை தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கின்றன. தற்பொழுது மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தியேட்டர்களில் முதல் படமாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட “பிஎம் நரேந்திரமோடி” என்ற படம் திரையிடப்பட உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருக்கும் இந்தப் படம் கடந்த ஆண்டு மே மாதமே திரையரங்குகளில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படம் மீண்டும் வெளியிடப்படுவது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறும்போது, “பிரதமர் மோடி, நமது நாட்டின் மிகச் சிறந்த பிரதமராக உருவாகி உள்ளார். இதுபோன்ற மிகவும் எழுச்சியூட்டும் தலைவரின் கதையைப் பார்ப்பதை விட சிறந்தது என்ன இருக்க முடியும். அதனால்தான் படத்தை மீண்டும் வெளியிடுகிறோம்” என்றார்.


Share this:

Related posts

சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்

NEWSKADAI

“வடிவேல்” பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…. நிதியுதவி…!!

THAVAMANI NATARAJAN

முதல் வார எலிமினேட் லிஸ்டில் இவங்க 4 பேர் தான்… தூள் பறக்கும் முதல் புரோமோ வீடியோ…!

NEWSKADAI

சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்… பாலிவுட்டை பதற்றத்தில் ஆழ்த்திய பீகார் முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

AMARA

தற்காலிகமாக இருந்தால் மகிழ்ச்சி… நிரந்தரமானால் பெரும் பாதிப்பு… அமைச்சர் கடம்பூர் ராஜு

MANIMARAN M

அள்ளிக்கொடுத்த கலியுக கர்ணன் சோனு சூட்… விருது கொடுத்து கெளரவித்த ஐ.நா…!

THAVAMANI NATARAJAN