Newskadai.com
சினிமா

மாட்டிவிட்ட வாட்ஸ் அப்… போதைப்பொருள் விவகாரத்தில் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகானுக்கு சம்மன்…!!

Drug case
Share this:

பாலிவுட்டின் முன்னணி இளம் நாயகனான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பல பிரச்சனைகளுக்கு தூண்டுகோலாக அமைந்தது. சுஷாந்த் மரணத்தில் சந்தேகம் எழ, அவருடைய காதலி ரியா சக்கரபர்த்தியை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் ரியாவிற்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடனும் தொடர்பு இருப்பது அம்பலமானது.

இதையடுத்து சுஷாந்திற்காக தான் போதைப் பொருட்களை வாங்கியதாக ரியா சக்ரபர்த்தி போலீசில் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இருந்தே பாலிவுட்டின் முன்னணி நாயகியான கங்கனா ரனாவத் பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாகவும், போதைப் பொருள் இல்லாத பார்ட்டிகளே இல்லை என்றும் கூறி பீதி கிளப்பினார்.

Drug case

தொடர்ந்து ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட்டில் 15க்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்களின் பெயர்களை கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தீபிகா படுகோனேவின் மேனேஜர் கரிஷ்மாவுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.போதைப்பொருள் கேட்டு கரிஷ்மா அனுப்பிய வாட்ஸ் அப் மெசெஜ்யின் அடிப்படையிலேயே சம்மன் அனுப்பட்டுள்ளது.

Drug case

இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நாயகிகளான தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் போதை தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் வரும் 26ம் தேதியும், ரகுல் ப்ரீத் சிங், சுஷாந்த் மேனேஜர் ஸ்ருதி மோடி, டிசைனர் சைமன் கம்பட்டா ஆகியோர் செப்டம்பர் 24ம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் மீது கங்கனா மறைமுக குற்றச்சாட்டிய நிலையில், 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

“எஸ்.பி.பி. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்”… மகன் சரண் வெளியிட்ட வீடியோ…!!

AMARA

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி… தனியார் மருத்துவமனையில் அனுமதி… வைரல் வீடியோ…!!

AMARA

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

AMARA

ஷாலினியுடன் கருப்பு மாஸ்க் அணிந்த படி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்ட அஜித்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI

“அதுக்கு மட்டும் நோ”… கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட சாய் பல்லவி…!!

NEWSKADAI

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

AMARA