Newskadai.com
அரசியல்

“இன்னோவா அல்ல.. ஏரோப்ளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது”… எல். முருகனை எள்ளி நகையாடிய நாஞ்சில் சம்பத்…!!

Nanjil
Share this:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை, வெளிச்சத்தில் கட்சி தவால் என தினுசு, தினுசான வேலைகள் தினமும் அரங்கேறிவருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக – அதிமுக கூட்டணி அமைந்தது. ஆனால் தற்போது இரு கட்சியின் தலைவர்களும் மாறி, மாறி கூறி வரும் குற்றச்சாட்டை பார்த்தால் இந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலில் நீடிக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். நாங்கள் யாரை கை காட்டுகிறோமோ அவர் தான் ஆட்சியில் அமர்வார்கள் என்றும், 2021ம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

Murugan

மேலும் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் எல்.முருகன், எந்த மாவட்டத்திலிருந்து பாஜக எம்.எல்.ஏ.வை சட்டமன்றத்திற்கு அனுப்புறாரோ, அந்த மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக அளிக்கப்படும் எனக்கூறினார். இதுகுறித்து அதிமுகவில் இணைந்ததற்காக ஜெயலலிதாவிடம் இன்னோவா காரை பரிசாக பெற்ற நாஞ்சில் சம்பத் கருத்து கூறியுள்ளார்.

பாஜக தமிழகத்தில் ஒரு தரங்கெட்ட அரசியலை முன்னெடுக்க போவதாக தெரிவித்த அவர், எந்த விலையை கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என நினைப்பதாக குற்றச்சாட்டினார். வெற்றி பெற வைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கே கார் என்றால், இன்னும் எந்த பாவத்தை எல்லாம் செய்வார்கள் என சிந்தித்து பார்க்க வேண்டும். பாஜகவினருக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன் இன்னோவா கார் இல்லை, ஏரோப்ளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே முடியாது. அவர்கள் பிழைக்கவும் முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.


Share this:

Related posts

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்??? முடிவு செய்யக் கூடும் காரியக் கமிட்டி…

MANIMARAN M

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI

கொரோனாவை வென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 80 வயதிலும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி…!!

AMARA

“வீணாக வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள்”… முதல்வரை மறைமுகமாக எச்சரித்த இல.கணேசன்…!!

NEWSKADAI

கை விரித்த பாஜக… மீண்டும் திமுகவிற்கு திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ…!

NEWSKADAI

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA