கொரோனா தொற்று ஏழை – பணக்காரன், நல்லவர் – கெட்டவர், அதிகாரி – சாமானியன் என்று மட்டுமல்ல அதிமுக – திமுக என்றும் பேதம் பார்க்காமல் தாக்கி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்களுடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:http://கொரோனாவை வைத்து கொள்ளை லாபத்திற்கு பிளான்போடும் தனியார் மருத்துவம்… தமிழக அரசு தடாலடி எச்சரிக்கை
அதன் தொடர்ச்சியாக நாகை மக்களவை உறுப்பினரான எம்.செல்வராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்வராஜ் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.