Newskadai.com
தமிழ்நாடு

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

Share this:

சென்னை போன்ற பெருநகரங்களில் தொலைபேசி மற்றும் இணையவழி வணிகம் மூலம் உணவு விற்பனை முறை அதிகமாகி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் மேம்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இந்த வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இருசக்கர வாகனமுடைய இளைஞர்களைப் பெரும் அளவுக்கு வேலைக்கு அமர்த்துகின்றன. ஒவ்வொரு ஆர்டர்களுக்கும் குறிப்பிட்ட தொகையும், தொலைவு மற்றும் விரைவாக சென்று வழங்கும் காரணங்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கி வந்தன. தற்சயம் இந்த ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சரியான ஊதியத்தை வழங்குவதில்லை என்று அதில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆன்லைன் நிறுவனங்கள், குறிப்பாக ஸ்விக்கி (Swiggy) தங்கள் ஊழியர்களுக்கு தொலைவில் உள்ள இடங்களுக்கு கொண்டு வழங்குவதற்கு 40 ரூபாய் வழங்கி வந்தது. ஒரு ஊழியருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25 முறை வாய்ப்புகளை தந்து அவர் சுமார் 1000 ரூபாய் நாளொன்றுக்கு வருமானம் கிடைக்கும்படி செய்து வந்தது. ஆனால் இப்பொழுது அந்த ஊதியம் 40 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது, மேலும் கொண்டு வழங்கும் வாய்ப்புகளும் குறைக்கப்பட்டுள்ளது, இதனால் அந்த பணியாளர்கள் நாளொன்றுக்கு 300 ரூபாய் அளவுக்கு மட்டுமே வருமானம் பெறுகின்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி இவர்கள் ஊதியத்தை பாதிக்கும் மேலாக குறைத்து அவர்களது குடும்பத்தினரையும் வறுமையில் வாடவிடுகின்றனர். அதனால் தமிழக அரசு இது போன்ற நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற ஆன்லைன் உணவு வழங்ககும் ஊழியர்களின் நலங்கள் பாதிக்கா வண்ணம் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Share this:

Related posts

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

MANIMARAN M

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

“இனி சனிக்கிழமையிலும் வொர்க்கிங் டே”… அரசு அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

THAVAMANI NATARAJAN

பிரதமர் திட்டத்திலேயே கை வைப்பீங்களா?… கொதித்தெழுந்த எல்.முருகன்… தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

MANIMARAN M

செப்.7 முதல் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு ரயில் ஓடும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

MANIMARAN M

கொரோனா தொற்று இல்லை… நலமுடன் இருக்கிறார் நல்லகண்ணு…

MANIMARAN M