Newskadai.com
இந்தியா

இஸ்லாமியர்கள் அடித்த மணி… ராமர் கோவிலில் ஒலித்தது…

Bell
Share this:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது வரவேற்ககூடியவை என்று முஸ்லீம் சகோதரரான இக்பால் அன்சரி தெரிவித்திருந்தார். ஆனால் பாபர் மசூதி இடிப்பிற்கு பின் சர்ச்சைக்குரிய இடம் முஸ்லீம்களுக்கே சொந்தம் என வழக்கு தொடுத்தவர்களில் இவரது தந்தையே முதல் நபராய் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தந்தைக்கு பிறகு இவர்தான் இந்த வழக்கை  தொடர்ந்து நடத்தி  வந்தார். 

வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமானதாக இருந்தபோதிழும் இக்பால் அதை வரவேற்றார். இதனால் முஸ்லீம் சமூகத்தை மதிப்பதுபோல இக்பாலுக்கு அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி நாட்டினார். இதையடுத்து கோயிலின் கட்டமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ராமர் கோயிலுக்காக 2100 கிலோ எடை கொண்ட  ராட்சத மணியை முஸ்லீம் சமூக கைவினை கலைஞர்கள் தவு தயால், இக்பால் மிஸ்திரி ஆகியோர் உருவாக்கி கொடுத்துள்ளார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது .இந்து, முஸ்லீம் என்ற பிரிவினைவாதிகள் மத்தியில் இந்து கோயிலுக்கு முஸ்லீம் நண்பர்கள் ராட்சத மணியை தயாரித்திருப்பது இந்து, முஸ்லீம்களுக்கிடையே நல்லுறவை மேலும் பலப்படுத்துகிறது. 

2100 கிலோ மணியை பித்தளை, தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு, பாதரசம், ஆகிய எட்டு உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த மிகப்பெரிய மணியின் ஒலியானது சுமார் 15 கி.மீ தொலைவிற்கு கேட்குமாம். மணி ஒலித்துகொண்டே இருக்கட்டும் இந்து முஸ்லீம் ஒற்றுமையை போற்றி…
 


Share this:

Related posts

கேரளாவை உலுக்கும் ‘கொரோனா’… தீயாய் வேலையை ஆரம்பித்த பினராயி விஜயன்…!!

NEWSKADAI

9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்…. காமக்கொடூரர்களுக்கு கிடைத்த மரண தண்டனையை கொண்டாடிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

“கடலுக்கு அடியில் 2300 கிலோ மீட்டர் நீளத்திற்கு கண்ணாடி இழை கேபிள்” அந்தமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர்.

MANIMARAN M

அயோத்தி பூஜையன்று குரங்குகளுக்கு சிறப்பான கவனிப்பு… உ.பி. முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

NEWSKADAI

தனியாருக்கு தாரை வார்க்கப்படும் ரயில்வே… சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் பணிகள்…!!

MANIMARAN M

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி… 161 அடியில் பிரம்மாண்ட ஆலயம்…!!

AMARA