கொரோனா ஊரடங்கு பிறப்பிட்ட காலகட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பார்க், பீச், சுற்றுலாத்தளங்கள் போன்றவற்றிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுத்தலங்களில் சுற்றித்திரியும் குரங்குகள் உணவின்றி தவித்து வந்துள்ளது. இதனால் தாய்லாந்தில் பியானோ இசைத்து குரங்குகளின் பசியை மறக்கடித்தவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலல் ஆகி வருகிறது. தாய்லாந்து நாட்டின் மையத்தில் லோப்புரி மாகாணம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் குரங்கு படையல் திருவிழா நடத்தப்படும்.
கடந்த 2007 ம் ஆண்டில், தாய்லாந்தின் லோப்புரி மாகாணம் பகுதிக்குட்பட்ட 2000 குரங்குகளுக்கு பழம், காய்கறிகளை வழக்கி திருவிழாவை தொடங்கியது. இந்த நிலையில் கொரோனாவால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லா நிலையில் லோப்புரி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் உணவு அளிக்க ஆளின்றி பசியால் வாடி வந்துள்ளது. இதையறிந்த பிரிட்டிஷ் இசைக்கலைஞரன் பார்டன், தன் பியானோ இசை மூலம் குரங்குகளை உற்சாகப்படுத்த எண்ணியுள்ளார்.
Musician Plays for Monkeys in Thailand https://t.co/cWFViLh8MO
— News Kadai (@newskadai) November 27, 2020
இதனை தொடர்ந்து குரங்குகள் அதிகம் நிறைந்த பகுதியில் தன் பியானோவை வைத்து வாசிக்கத் தொடங்கியுள்ளார். அவரின் இசையை ரசித்துக் கேட்ட குரங்குகள் இசைக்குறிப்புகடிளை புரட்டி பார்வையிட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தங்களது பசியினை மறந்து பார்டன் உடன் விளையாடி மகிழ்ந்தன. இசையை கேட்டு பசியை மறந்து மிகிழ்சியாக விளையாடி குரங்குகளின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதனை படிக்க: http://வீட்டை காக்க முயன்ற தொழிலாளி கால் தடுக்கி மின்சார கம்பியில் விழுந்து பலி..!!