Newskadai.com
தமிழ்நாடு

சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர் மீது வழக்கு..

Share this:

இந்தியாவையே பரபரப்படையச் செய்த சாத்தான்குளம் தந்தை மகன் கொலை சம்பவம் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், மீண்டும் சாத்தான்குளத்தில் ஒரு கொலை சம்பவம் காவல் ஆய்வாளர் தூண்டுதலின்பேரில் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் செல்வம் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் அடிக்கடி அடிதடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து செல்வம் தட்டார்மடம் காவல்நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். பின்னர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்த செல்வம், நீதிமன்ற விசாரணையில் காவல்துறையினர் எதிர்தரப்புக்கு சாதகமாக செயல்பட்டு வந்ததாக செல்வம் நீதிபதியிடத்தில் கூறியுள்ளார். இந்த நிலையில் செல்வம் நேற்று இருசக்கர வாகனத்தில் கொழுந்தட்டு விலக்கு அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு கிடந்த இரு சக்கர வாகனத்தை கைப்பற்றியதுடன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் கடத்தி சென்ற செல்வத்தை குற்றுயிரும் குலையுயிருமாக அடித்து சாத்தான்குளம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். உயிருக்கு போராடிய அவரை கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் செல்வத்தின் உறவினர்கள் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் தூண்டுதலில் தான் கொலை நடந்துள்ளது என்று கூறி செல்வத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்ப விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திசையன்விளை காவல் நிலையத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் செல்வத்தின் உறவினர் திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது 107, 336, 302, மற்றும் 364, என்ற 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகே செல்வம் உடல் உடற்கூறு ஆய்விற்க்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சாத்தான்குளத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்… துக்கத்தில் தொண்டர்கள்…!

NEWSKADAI

ஆசை வைத்து மோசம் போன ‘காட்டு’ யானை… கோபத்தில் வேனை உருட்டித் தள்ளிய அட்டகாசம்…!

THAVAMANI NATARAJAN

சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 7 பேர் பலியான துயரம்..!!

THAVAMANI NATARAJAN

பட்டாசு ஆலை தீ விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு … முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

THAVAMANI NATARAJAN

திருநங்கைகளை கொலை செய்த கொலையாளிகளை தட்டித் தூக்கிய நெல்லை போலீசார்… திடுக்கிடும் தகவல்கள்…

MANIMARAN M

தொடரும் நீட் தேர்வு மரணங்கள்: கைக்கு வராத ஹால்டிக்கெட்… மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!!

MANIMARAN M