Newskadai.com
தமிழ்நாடு

அபராதம் கேட்டு அடாவடி செய்த பேரூராட்சி ஊழியர்கள்… கொரோனா லாக்டவுன்னில் அதிகரிக்கும் கொடுமை

Elampillai
Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதிக்கப்படிருக்கும் நிலையில், தமிழகத்தில் கடந்த 6 மாத காலமாக விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்து விசைத்தறி தொழிளாலர்கள் கடும் நெருக்கடி சந்தித்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவு விசைத்தறி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இளம்பிள்ளை பேரூராட்சியில் கொரோனா பரவல் தொடர்பாக அரசு கூறியுள்ள கட்டுபாடுகளை கடைபிடிக்காத ஜவுளிக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இளம்பிள்ளையில் உள்ள ஒரு ஜவுளிக்கடை ஊழியருக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் முகக்கவசம் அணியவில்லை என்று கூறி இளம்பிள்ளை பேரூராட்சி ஊழியர்கள் ரூ.500 ஐ அபராதம் விதித்துள்ளனர்.

கடையில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே உள்ள நிலையில் அபராதம் ஏன் கட்ட வேண்டும் என்று பேரூராட்சி ஊழியர்களிடம் கேட்டுள்ளார், அபராதம் கட்டினால் மட்டுமே தொடர்ந்து கடை நடத்த முடியும் என பேரூராட்சி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். இதைதொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் கொண்டு வந்த குப்பைகளை கடையின் முன்பு கொட்டி அநாகரீகமாக நடந்து கொண்டனர்.

இது குறித்து கடையின் உரிமையாளர் சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொரோனாவை காரணம் காட்டி தினந்தோறும் 200, 300, 500 என அபராதம் விதிக்கப்படுகிறது. வசூலிக்கும் பணத்துக்கு பெரும்பாலும் ரசீது தருவதில்லை இதனால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறோம் எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this:

Related posts

விரைவில் நிரம்பப்போகும் மேட்டுர் அணை… விவசாயிகள் மகிழ்ச்சி

THAVAMANI NATARAJAN

சம்பள பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு… கொலையில் முடிந்த பயங்கரம்.!!

THAVAMANI NATARAJAN

#கொரோனா : கோவையில் குறையாத பலி… மற்ற மாவட்ட நிலையை தெரிந்துகொள்வோம்..!!

NEWSKADAI

ஆயுத பூஜையில் அலட்சியம்.. நிறைமாத பசுமாடு பலியான பரிதாபம்..!!

THAVAMANI NATARAJAN

8 மாவட்டங்களில் இடியுடன் வெளுத்து வாங்க போகும் கனமழை… வானிலை எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

திண்டுகல்லில் மிகக்குறைவான கொரோனா தொற்று… மற்ற மாவட்ட நிலை..?!

NEWSKADAI