Newskadai.com
இந்தியா

கொரோனா தொற்றுக்கு பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்… அரசுக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதிமன்றம்…!!

Share this:

இவ்வாண்டு மார்ச் மாதம் டெல்லியில் தப்லீக் ஜமாத் சார்பில் வழக்கமான கூட்டம் நடந்தது. அந்த நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் மத்திய மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து முழுவதுமாக முடக்கப்பட்டதால் டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அங்கேயே தங்க வேண்டிய சூழலுக்கு ஆளாயினர்.

அருகிலுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த வாகன வசதி ஏற்படுத்திக் கொண்டு அவரவர் மாநிலம் சென்றனர். இவ்வாறு டெல்லியிலிருந்து மகாராஷ்டிரா சென்று அங்கு தங்கியிருந்த தப்லீக் ஜமாத்தினரை மும்பை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 29 பேர் வெளிநாட்டவர்கள். அவர்கள் தங்கள் மீதான வழக்கு பதிவை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், “நாங்கள் இந்தியாவிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தான் எங்களை நாட்டிற்குள் அனுமதித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் நாங்கள் மசூதிகளில் தங்கியிருந்தோம். எந்த விதமான சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஆதலால் எங்கள் மீதான வழக்கு பதிவை ரத்து செய்ய வேண்டும். என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம். ஜி.சாவல்கர், டி. வி.நலவாடே ஆகியோர் கொண்ட அமர்வு காவல்துறையையும் மாநில அரசையும் கடுமையாக கண்டித்து தீர்ப்பளித்தனர். 

தீர்ப்பின் சாரம்சங்கள் :
  • அரசியல் நிர்பந்தத்துடன் மகாராஷ்டிரா அரசு செயல்பட்டுள்ளது.
  • போலீசார் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
  • பேரிடர் காலத்தில் பலிகடாவை தேடிய அரசு தப்லீக் ஜமாத்தினரை பலிகடா ஆகியுள்ளது.
  • மத மாற்றம் செய்கிறார்கள், மத பிரச்சாரம் செய்கிறார்கள் என்று இவர்கள் மீது காவல்துறை கூறிய குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை.
  • தப்லீக் ஜமாஅத்தில் பங்கேற்றவர்களால் தான் கொரோனா பரவியது என்று அனைத்து ஊடகங்களும் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்தன. அரசும் இதை அனுமதித்தது. ஆனால் இந்த செய்தி ஆதாரம் இல்லாதது.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வந்து தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்வு 50 ஆண்டுகளாக ஆண்டு முழுவதும் நடக்கிறது.
  • நம் நாட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு உதவுவதற்கு பதிலாக விசா விதிமுறைகளை மீறி விட்டதாகவும், கொரோனா வைரஸ் பரப்பினார்கள் என்றும் குற்றம் சாட்டி சிறையிலடைத்து இருக்கிறோம்.
  • அரசு அவர்களுக்கு செய்த மிகப்பெரிய அவமரியாதை இது.
  • அவர்களுக்கு செய்த அவமரியாதைக்கு பிராயச்சித்தமாக மரியாதைக்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனக்கூறி தப்லீக் ஜமாத்தை சேர்ந்த 29 வெளிநாட்டவர்கள் மீது மும்பை காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.


Share this:

Related posts

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M

உடனே தடை பண்ணுங்க… இல்லாவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் … வைகோ கொந்தளிப்பு!

AMARA

ஆதார் விவரங்களை மாற்ற இனி கட்டணம்… மத்திய அரசு அறிவிப்பு…

MANIMARAN M

தீராத செல்ஃபி மோகம்… சிறுமிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை… வைரலாகும் வீடியோ…!

NEWSKADAI

25 ஆயிரம் கோடியை ஏப்பம் விட துடிக்கும் அம்பானி பிரதர்ஸ்… சட்டையைப் பிடிக்கும் உச்சநீதிமன்றம்…

MANIMARAN M