Newskadai.com
தமிழ்நாடு

விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள் : வெளிச்சத்திற்கு வந்த 110 கோடி ரூபாய் முறைகேடுகள்…

Share this:

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நேரடி நிவாரணம் அளிக்கும் வகையில், தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்த திட்டத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து 110 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த விவகாரம் பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் முகவர்கள் மற்றும் கணினி மையங்கள் மூலம் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது, மத்திய அரசின் கொரோனா நிவாரண நிதி பெற்றுதருவதாக கூறி பொது மக்களிடம் ஆதார், வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். அப்படி பதிவு செய்ய ஒவ்வொரு நபரிடமும் ரூ.500 வரை பெற்றுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 6 லட்சம் பயனாளிகள் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். மற்ற 25 மாவட்டங்களில் மொத்தமாகவே ஒரு லட்சத்துக்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

PM Kissan

மத்திய அரசின் இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்திலேயே மாவட்டங்களுக்கு 10 குழுக்கள் வீதம் ஆய்வு செய்ய அனுப்பப்பட்டன. அந்த ஆய்வில் 5 லட்சம் பேருக்கும் அதிகாமானோர் சந்தேக பட்டியலில் இருப்பதை கண்டறிந்தோம். இதைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி மூலம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, இதுவரை 18 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக அளவில் முறைகேடாக பெயர்களை சேர்த்த பகுதிகளில் உள்ள வேளாண் துறை உதவி இயக்குநர்கள் உட்பட 37 அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணினி இயக்குபவர், ஏடிஎம் பிளாக் மேலாளர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் உட்பட 80 பேரை பணி நீக்கம் செய்துள்ளோம்.

PM Kissan

சிபிசிஐடி விசாரணை முடிவில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை முறைகேடாக பெற்ற 32 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சத்து மேற்பட்ட பயனாளிகளிடம் இருந்து 110 கோடி ரூபாய் வரை திரும்ப பெறப்பட வேண்டியுள்ளது. பணத்தை பெற, வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசிடம் அனைத்து தகவல்களும் இருப்பதால் யாரும் தப்பிக்க முடியாது. இந்த நடவடிக்கையால் உண்மையான விவசாயிகள் யாருமே பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.


Share this:

Related posts

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு… எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அறிவிப்பு….!

NEWSKADAI

பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி… விலையில்லா புத்தகங்கள் கொடுக்கும் பணி தொடங்கியாச்சு…!!

THAVAMANI NATARAJAN

#அNEETதி : நீட் தேர்வினால் மதுரை மாணவி தற்கொலை… அடுத்தடுத்த மரணத்தால் கொதிப்பில் தமிழகம்…

NEWSKADAI

கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

NEWSKADAI

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கான நீர் திறப்பு… மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்…!!

THAVAMANI NATARAJAN

தொடரும் நீட் தேர்வு மரணங்கள்: கைக்கு வராத ஹால்டிக்கெட்… மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!!

MANIMARAN M