கொரோனா(covid-19) கடந்த ஆறு மாசமா உலகையே உண்டு இல்லன்னு பண்ணிட்டு இருக்கு. உலக நாடுகள் அனைத்தும் அதை தடுக்க முடியாமல் விழிபிதுங்கி நிக்குது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்டுபிடிச்ச நமக்கு … நம்ம தொண்டையை புடிக்கிற இந்த வைரஸ கொல்ல வழி தெரியாம திக்குமுக்காடிகிட்டு இருக்கோம். அவங்கவங்களுக்கு தெரிஞ்ச தற்காப்பு முறைய ஒவ்வொரு நாடும் பின்பற்றச் சொல்லுது.
வேலைக்கு போக முடியாமல், தொழில் செய்ய முடியாமல் மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். மத்திய மாநில அரசுகளே நிதி பற்றாக்குறையால் தடுமாறி வருகின்றன. சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இப்படி உலகமே …. அல்லோலகல்லோலப் பட்டுட்டு இருக்குறப்ப, நம்ப முகேஷ் அம்பானி மட்டும் ஜெட் வேகத்துல முன்னேறிக் கிட்டு போறார். இந்த கொரோனா காலத்தில் மட்டும் அவருடைய சொத்து மதிப்பு 145 மடங்கு உயர்ந்திருக்கு.
ஆறு மாசத்துக்கு முன்னாடி உலகின் பத்தாவது பணக்காரராக இருந்தவர் இப்போ இந்த நிமிஷம் உலகின் நான்காவது மிகப் பெரும் பணக்காரரா வளர்ந்திருக்காரு. அவருக்கும், அவருடைய இந்த அசுர வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அரசுக்கும், மற்றும் அத்தனை பேருக்கும் நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒட்டு மொத்த நாடும் கஷ்டப்பட்டாலும் நம்ம ஆள் ஒருத்தன் முன்னுக்கு வருவது சந்தோஷமான விஷயம் தானே.