Newskadai.com
விளையாட்டு

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

Share this:

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அம்பயரான சைமன் டாஃபெல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த அம்பயர் விருதை வென்றவர். 1999-ம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயரிங் பணியை திறம்பட செய்தவர். அம்பயர்கள் என்பவர்கள் கிரிக்கெட் வீரர்களையும், அவர்களது செயல்பாடுகளையும் மைதானத்தில் உன்னிப்பாக நன்கு கவனிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும், மேலும் வீரர்களின் அணுகுமுறைகளும், செயல்பாட்டையும் கவனித்து சரியான தீர்ப்பை வழங்க வேண்டிய பொறுப்பு மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். இதனடிபடையில், 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டி உட்பட பல முக்கிய போட்டிகளில் இவர் தனது சிறப்பான பணியை செய்துள்ளார்.

சமீபத்திய நேர் காணலில் சைமன் டாஃபெல் கூறுகையில், “நான் பார்த்ததிலேயே சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர் என்றால் தோனிதான். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது அவரது செயல்பாடு மிகவும் கெட்டிக்காரத்தனமாகவும் முடிவு எடுப்பதில் நிதானமாகவும் இருக்கும். மேலும் ஆஸ்திரேலிய அணியின் டேரன் லீமன் மற்றும் வார்னே ஆகியோர் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர்கள். இந்த மூன்று பேரும் சிறப்பாக கிரிக்கெட்டை கணித்து விளையாடக் கூடியவர்கள். இந்தியாவின் கேப்டன் தோனி, ஆஸ்திரேலியா டேரன் லீ மேன், ஷேன் வார்னே மூவருமே கிரிக்கெட்டில் அதிபுத்திசாலிகள்”, என்று கூறியுள்ளார்.


Share this:

Related posts

ஓய்வை அறிவித்தார் “தல” தோனி… உற்சாகம் இழந்த கிரிக்கெட் ரசிகர்கள்…!!

AMARA

ரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய துயர சம்பவம்… IPL-லிருந்து விலகியது இதற்காக தானாம்…!

MANIMARAN M

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து…. பெண்கள் T-20 போட்டியை விரைவில் நடத்த முடிவு…!!

MANIMARAN M

இந்திய அணிக்கு தங்கம்.. பஹ்ரைன் அணி தகுதி நீக்கம்…

NEWSKADAI

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி… தள்ளிப்போகிறதா ஐ.பி.எல். போட்டி…!!

MANIMARAN M

“எல்லா புகழும் தமிழக மக்களுக்கே”… கேல் ரத்னா விருது பெற்ற சேலம் மாரியப்பன் பெருமிதம்…

THAVAMANI NATARAJAN