Newskadai.com
விளையாட்டு

“தோனியிடம் சரியான கேப்டன் சிப் இல்லை” – முன்னாள் கிரிக்கெட் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு..!!!

Share this:

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ டி20 டைம் அவுட் நிகழ்ச்சியில் கௌதம் கம்பீர் சென்னை அணியின் கேப்டன் தோனியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அவர் கூறியதாவது, “217 ரன்கள் இலக்கை விரட்டும் போது தோனி போன்ற ஹிட்டர்கள் 7ம் நிலையிலா இறங்குவது? அவர் இறங்கும்போது ஆட்டம் முடிந்து விட்டது. ஃபாப் டுபிளெசிஸ் தனி வீரராக நின்றார். 

தோனியின் செயல் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எம்.எஸ்.தோனி 7ம் நிலையில் இறங்கியது அதுவும் ருதுராஜ் கெய்க்வாட்டை இறக்கிய பிறகு, தான் இறங்க முடிவெடுத்தது, சாம் கரணை ஆரம்ப நிலையில் களமிறங்கச் செய்தது இவை அனைத்தும் அர்த்தமுள்ளதாக தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால் கேப்டனாக அணியை முன்னின்று வழி நடத்தியிருக்க வேண்டாமா.

தோனி இறங்கும் போது ஆட்டம் முடிந்து விட்டது, 38 பந்துகளில் 103 ரன்கள் தேவை. டுபிளெசிஸும் முழு வீச்சுக்கு வரவில்லை. அவர் 18 பந்துகளில் 17 என்று கொஞ்சம் திணறிக் கொண்டிருந்தார். தோனி செய்ததையே மற்றவர்கள் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும், கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும். செய்தது தோனி என்பதால் ஒருவரும் வாயைத் திறப்பதில்லை.

சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில் சாம் கரனை இறக்கி விடுவது, தோனி தன்னை விட சாம் கரணைத்தான் சிறந்தவர் என்று நம்புகிறார் போல் தெரிகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தன்னை விட சிறந்த வீரர் என்று தோனி கருதுகிறாரா. கரண், கேதார் ஜாதவ், டுபிளெசிஸ், முரளி விஜய் ஆகியோர் அவரை விடச் சிறந்தவர்கள் அப்படித்தானே.

தோனி முதலில் இறங்கி அவுட் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. அதில் தவறொன்றுமில்லை. குறைந்தபட்சம் அணியை முன்னின்று வழி நடத்தியிருக்கலாம், உத்வேகம் அளித்திருக்கலாம். கடைசி ஓவரில் ஆடிய ஆட்டத்தை 4ம் நிலை அல்லது 5ம் நிலையில் இறங்கிச் செய்திருந்தால் டுபிளெசிசுடன் சேர்ந்து இதை ஒரு சுவாரசியமான ஆட்டமாக மாற்றியிருக்கலாம். ஆனால் அப்படி சவாலாக இருக்க வேண்டும் என்ற நோக்கமெல்லாம் அவருக்கு இல்லை.

ஒவ்வொரு போட்டியையும் முடிந்தவரையில் வெல்லப் பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணியிடம் தீவிரமே இல்லை, வெற்றியின் நோக்கமே இல்லை. டுபிளெசிசும் ஆரம்பத்தில் திணறினார். எனவே தோனி 7ம் நிலையில் இறங்கியது தவறான கணக்கே. சரியான கேப்டன்சி இல்லை. தோனி போன்ற ஒருவரிடம் இதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.” என்று கம்பீர் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.


Share this:

Related posts

அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்… திணறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

MANIMARAN M

ஓய்வை அறிவித்தார் “தல” தோனி… உற்சாகம் இழந்த கிரிக்கெட் ரசிகர்கள்…!!

AMARA

ஐபிஎல் வரலாற்றில் சாதனை: நெருக்கடி கொடுத்த பஞ்சாப், சிக்சர் மழை பொழிந்த ராஜஸ்தான்

NEWSKADAI

சன்ரைஸ் அணியை துவம்சம் செய்த ராயல் சேலஞ்சர்ஸ்..!!!

MANIMARAN M

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வெற்றிக்கு காரணம் என்ன..? தோனியின் ருசிகர பேட்டி..!!

MANIMARAN M

“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

MANIMARAN M