Newskadai.com
இந்தியா

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை கிழித்தெறிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

Share this:

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மக்களவையில் பாஜகவிற்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இம்மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் தாக்கல் செய்த மசோதாக்களை ஆதரித்த அதிமுக மாநிலங்களவையில் எதிர்த்தது. வேளாண் மசோதாவின் நகல்கள் கிழித்து எறியப்பட்டதுடன் சபை தலைவரின் மைக் உடைக்கப்பட்டதால் மாநிலங்களவையில் பரபரப்பு நிலவியது. எதிர்க்கட்சி எம்பிக்களின் நடவடிக்கைகளால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.


Share this:

Related posts

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வில் அனுமதி இல்லை – மத்திய அரசு…

MANIMARAN M

காத்தையே காசுக்கு வித்தவங்க!! ரயில மட்டும் விட்டுறுவோமா!! கூவி கூவி விற்கும் மத்திய அரசு…

THAVAMANI NATARAJAN

கொரோனாவை வீழ்த்த வந்த “Sputnik V”…! ரஷ்யாவுடன் கை கோர்க்குமா இந்தியா…???

MANIMARAN M

கொரோனா தொற்றுக்கு பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்… அரசுக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதிமன்றம்…!!

MANIMARAN M

அசத்தல் உடையில் அயோத்திக்கு புறப்பட்ட மோடி… இன்னும் சற்று நேரத்தில் அடிக்கல் நாட்டுகிறார்…!!

NEWSKADAI

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்…

MANIMARAN M