Newskadai.com
தமிழ்நாடு

நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… மனம் குளிரவைத்த கோவை மாநகராட்சி…!

Share this:

கோவை என்றாலே நம் நினைவுக்கு வருவது பஞ்சாலைகள், மோட்டார்கள் தான். அதையடுத்து வளர்ந்துள்ள பல்வேறு தொழில்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது நகைச் செய்யும் தொழில். குறைந்த எடையில் சிறந்த வேலைப்பாடுகளுடன் இங்கு செய்யப்படும் நகைகளுக்கு நாடெங்கும் மட்டுமல்ல உலகெங்கும் அதிக வரவேற்பு உள்ளது.

தற்போது ஆண்டுக்கு சுமார் 70 டன் அளவுக்கு இங்கு தங்க நகைகள் தயார் செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நகை செய்யும் தொழிலில் வட மாநிலத் தொழிலாளர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுள் இங்குள்ள நகைப் பட்டறை தொழிலாளர்களும் அடங்குவர். கோவை மாநகரில் கொரோனா பரவல் காரணமாக மாநகராட்சி ஆணையர் உத்தரவுபடி கடந்த நான்கு மாதங்களாக கோவையில் இயங்கி வந்த சிறு, குறு தங்க நகை பட்டறைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வந்தனர். தற்பொழுது கோவையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாலும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவரப்படுத்தபட்டு வருவதின் காரணமாகவும், நகரில் இயங்கி வந்த வணிக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி வழங்கியது அரசு.

இதனிடையே, நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த சிறு குறு தங்க நகை பட்டறைகளை மீண்டும் இயங்க அனுமதி அளித்துள்ளது கோவை மாநகராட்சி நிர்வாகம். இதனால் நகைப் பட்டறைத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் திரும்புவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் நகைப் பட்டறைகளை செயல்பட மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக் கொடுத்துள்ளதால் இங்குள்ள ஒரு லட்சம் குடும்பங்கள் தங்கள் சிரமங்களிலிருந்து விடுபடும் என்றும், இதற்காக பரிந்துரை செய்த அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கோவை பொற்கொல்லர்கள் சார்பாக அதன் சங்கத் தலைவர் எஸ்.எம்.கமலஹாசன் கூறினார்.


Share this:

Related posts

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடக்கப்போவது இதுதான்… வெளியானது எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 14-ஆவது இடம். மத்திய அரசின் சதியா ?அமைச்சர் பரபரப்பு தகவல்…

MANIMARAN M

விநாயகர் ஊர்வலம்… தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதா…? உயர் நீதிமன்றம் கேள்வி..

MANIMARAN M

தமிழக மக்களே உஷார்: 15 மாவட்டங்களை பதற வைக்கப்போகும் மழை…!!

THAVAMANI NATARAJAN

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை… விரைவில் நல்ல முடிவு …!!

THAVAMANI NATARAJAN

ஸ்கூல் இருக்கு…. ஆனா இல்ல… மாணவர்களை குஷி படுத்திய அறிவிப்பு

MANIMARAN M