Newskadai.com
தமிழ்நாடு

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

Share this:

சமீப காலமாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இதுப் போன்ற கிணற்றுக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பல நேரங்களில் இம்முயற்சிகள் தோல்வியடைந்து குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுகின்றது. அபரிமிதமான வளர்ச்சியடைந்திருந்தாலும் விஞ்ஞானமும் தொழில்நுட்பங்களும் இதுப் போன்ற விபத்துக்களிலிருந்து காப்பதற்கு பங்களிப்பின்றி இருக்கின்றது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு வரை படித்துள்ள ஆட்டோ மெக்கானிக் ஒருவர் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நவீன கருவியை வடிவமைத்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆட்டோ பழுது பார்ப்பு மற்றும் டிங்கரிங் பட்டறை நடத்திவருபவர் லெனின் என்கிற நாகேந்திரன்(40). இவர் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு 6 விதமான கருவிகளை வடிவமைத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இந்த கருவியால் குழந்தைக்கு எந்தவித பாதிப்புமின்றி எளிதாக மீட்கமுடியும். இந்த கருவி 10 அங்குலம் சுற்றளவு வரை விரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த கருவியை பக்கவாட்டில் செலுத்தி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை கீழே இறங்காமல் தடுக்க முடியும். குழந்தை தலைகீழாகவோ, நேராகவோ, எந்த நிலையில் விழுந்தாலும் எவ்விதப் பாதிப்புமின்றி இந்த கருவிகள் மூலம் மீட்கலாம்.

இந்த கருவியில் சென்சார் மற்றும் எல்இடி பல்புடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதால ஆழ்துளைக் கிணற்றில் உள்ள குழந்தை எந்த நிலையில் சிக்கியுள்ளது என்று அறிந்து எளிதாக மீட்க முடியும். இருபதாயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த கருவி மூலம் 7 முதல் 10 கிலோ எடையுள்ள குழந்தையை மீட்கலாம். மத்திய மாநில அரசுகள் இந்த கருவியை அங்கீகரித்து நிதியுதவி செய்தால், தொழில்நுட்ப உதவியுடன் மேலும் மேம்படுத்தி இந்த விபத்துக்களிலிருந்து குழந்தைகளை எளிதாக காப்பாற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.


Share this:

Related posts

கட்டிங்கிற்கு காசு சேர்க்க கூட்டு சேர்ந்த இளைஞர்கள்….. சேலத்தில் ஜோராக நடந்த “குடி”மகன்களின் வியாபாரம்…!

THAVAMANI NATARAJAN

வரலாற்றில் முதன் முறையாக தேசிய கொடியேற்றிய தூய்மைப் பணியாளர்கள்…

MANIMARAN M

“இ பாஸ் தேவையா?”… தமிழக அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மனித உரிமை ஆணையம்.

MANIMARAN M

திருச்செந்தூர் முருகன் கோயில் தேர்த் திருவிழா ரத்து…

POONKUZHALI

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை…தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரின் தன்னலமற்ற செயல்…

THAVAMANI NATARAJAN