Newskadai.com
தமிழ்நாடு

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

Share this:

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நபார்டு வங்கி அதிகாரிகள் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இது குறித்து பத்திரிகைகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில்,

பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளும் செயல்பட தமிழகத்திலுள்ள 5,800 கூட்டுறவு வங்கிகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் பதினோராயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 32 ஆயிரத்து 970 நியாய விலைக் கடைகள் மூலம் அரிசியுடன் சமையல் பொருள்களும் இலவசமாக இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் “நகரும் நியாய விலைக்கடைகள் திட்டம்” செயல்படுத்தபட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 3501 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 400 நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட உள்ளன. இத்திட்டத்தினால் மக்கள் மிகப் பெரிய பயனை அடைவார்கள்” என்று தெரிவித்தார்.


Share this:

Related posts

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி

MANIMARAN M

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

விநாயகர் ஊர்வலம்… தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதா…? உயர் நீதிமன்றம் கேள்வி..

MANIMARAN M

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

கொரோனா குறைந்தாலும் அலட்சியம் வேண்டாம்… மத்திய, மாநில அரசுகளை அலார்ட் செய்த ஐகோர்ட்…!

NEWSKADAI

மகிழ்ச்சி செய்தி..! ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும்

AFRIN