Newskadai.com
அரசியல்

எம்.எல்.ஏ. பிரபு காதல் திருமண விவகாரம்… மணப்பெண் செளந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜர்…!

Share this:

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தனது சொந்த ஊரான தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் தகவல் தீயாய் பரவி வந்தது. திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்த செளந்தர்யா என்ற கல்லூரி மாணவியை தனது பெற்றோர், சொந்தங்கள் சூழ திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே மணப்பெண்ணின் தந்தையான சுவாமி நாதன் வெளியிட்ட வீடியோவில் எனது குடும்பத்தினருடன் எம்.எல்.ஏ.பிரபு மகன் போல் பழகி வந்தார். அவருக்கும் என் பெண்ணுக்கும் 20 வயது வித்தியாசம். இந்நிலையில் எனது மகளை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுவிட்டார். நான் சாதி பார்க்கவில்லை… ஆனால் வயது வித்தியாசம் முக்கியமல்லவா? என கதறினர்.

 

மேலும் படிக்க: http://அடிதூள் : நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்..!!

தனது திருமண வதந்திகளுக்கு காதல் மனைவியுடன் விளக்கம் அளித்த எம்.எல்.ஏ. பிரபு, நாங்கள் கடந்த 4 மாதங்களாக காதலித்து வருகிறோம். முறையாக செளந்தர்யா வீட்டிற்கு சென்று பெண் கேட்டோம். ஆனால் பெண் தர மறுத்துவிட்டனர்.வேறு வழியின்றியே எனது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்தார்.

இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ. பிரபு தனது மகளை கடத்தியதாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மணப்பெண் செளந்தர்யாவையும், பெண்ணின் தந்தையான சுவாமி நாதனையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க: #ராசிபலன் : உங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க பலர் காத்திருப்பார்கள்… பைரவரை வழிபடுங்கள்…

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு எம்.எல்.ஏ. பிரபு காதல் திருமணம் செய்த செளந்தர்யாவும், அவருடைய தந்தையான சுவாமிநாதனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். பரபரப்பான இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.


Share this:

Related posts

ஓ.பி.எஸ். மகன் பதவிக்கு ஆபத்து?… தேனி எம்.பி. ரவீந்திரநாத் வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

MANIMARAN M

முதல்வர் வேட்பாளர் யார்.. ? முடிவு எடுக்க முடியாமல் திணறும் அதிமுக…

MANIMARAN M

“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு…!

AMARA

“இனி இ-பாஸ் தேவையில்லை”… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!

AMARA

இழி துரோக வரலாற்றில் இடம் பெறுவாய்… 800 பட விவகாரத்தில் விஜய் சேதுபதிக்கு ராமதாஸ் எச்சரிக்கை…!

NEWSKADAI

“தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்”… அதிமுகவில் வெடித்தது உச்சகட்ட மோதல்…!!

AMARA