கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, வங்கிகளின் வட்டி வசூல், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடிக் கட்டண உயர்வு என மேலும் வேட்டையாடுகின்றன அரசுகள் என தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது :
- மக்களின் வாழ்க்கை குலைந்து கொண்டு இருக்கும் போது இடியை இறக்கியதைப் போல, சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
- எவ்வளவு அடிகளை வேண்டுமானாலும் மக்கள் தாங்குவார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களா..?
- ஆழமான புதைகுழிக்குள் தள்ளப்பட்ட அப்பாவி மக்களை பொருளாதார ரீதியாக வேட்டையாடிக் காயப்படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது.
- வங்கிகள் நடத்தும் வட்டி வசூல், பெட்ரோல் டீசல் விலை உயர்வு – இதன் தொடர்ச்சியாக சுங்கச் சாவடிக் கட்டணங்களும் உயர்வு.!
- அன்றாட வாழ்க்கை அசைவின்றி நின்றுவிட்டது – வேலைகள் இல்லை, வருமானம் இல்லை, ஊதியம் இல்லை, சிறுகுறு தொழில்கள் மொத்தமாக முடக்கம், பெரிய நிறுவனங்களில் உற்பத்தி இல்லை – இது வழக்கமான காலமா..?
- மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையோ அனுதாபமோ இல்லையா..?
- இந்திய பொருளாதாரம்(உள்நாட்டு உற்பத்தி) இதுவரை இல்லாத வகையில் 23.9% பின்னடைவைச் சந்தித்துள்ளது.
- சாதாரண மனிதன் அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சி அதைவிட அதிகமானது, மோசமானது. இதனைக் கவனத்தில் கொண்டு அல்லவாஅ அரசாங்கம் செயல்பட வேண்டும்..?
- மாநில அரசும், மக்களுக்கு பொருளாதார உதவிகள், சலுகைகள் வழங்குவதன் மூலமாக துன்ப துயரங்களில் தோள் கொடுத்து உதவிட வேண்டும்..!
- பசியில் வாடும் மனிதனுக்குச் சோறு போடாமல், உன்னிடம் கொஞ்சம் ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறேன் என்கிறார்கள்.
- சுங்கக் கட்டணக் கொள்ளையைச் செய்யாதீர்கள்..! பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள்.