Newskadai.com
அரசியல்

உங்க ஆட்சிக்கு முடிவுக்கு வந்தால் தான் விவசாயிகளுக்கு விடிவு… எரிமலையாய் கொந்தளித்த ஸ்டாலின்…!

Stalin
Share this:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைந்த தலைமைச் செயற்குழு உறுப்பினரும், ஒரத்த நாடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான மு.காந்தியின் உருவப்படத்தை காணொலி வாயிலாக இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து காந்திக்கு புகழாஞ்சலி செலுத்திய ஸ்டாலின், தொண்டர்களிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார்.

Stalin

தஞ்சை மாவட்ட திமுகவின் போர் வீரராக மட்டுமின்றி இயக்கத்திற்காக உழைத்தவர் என மு.காந்தியை புகழ்ந்துரைத்தார். மேலும் கட்சிக்காக உழைப்பவர்களை இயக்கம் எப்போதும் கைதூக்கிவிடும் என்பதையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டினார். அதிமுக அரசு தமிழகத்தின் சாபக்கேடு என்றும், மக்கள் விரோத அரசு மத்திய பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களையும் முதலமைச்சர் பழனிசாமி கும்பிடு போட்டு ஏற்றுக்கொண்டார் என சாடினார்.

Stalin

பஞ்சாப் மாநிலத்தை போல் குறைந்த பட்ச ஆதார விலைக்குக் கீழ் நெல் வாங்க தடை போட்டு சட்டம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படி ஒப்பந்தம் போடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டு சிறைத தண்டனை என்று கூறுகிறது அந்தச் சட்டம். பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு உள்ள தைரியம் திரு. பழனிசாமிக்கு இல்லை. அப்படியொரு சட்டத்தை தமிழகச் சட்டமன்றத்திலும் கொண்டு வாருங்கள் என திமுக வலியுறுத்தி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

Stalin

விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் 3 வேளாண் சட்டங்களையும் செயல்படுத்த முடியாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் பார்ப்போம். நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் அளிக்காத வேளாண் சட்டங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று சொல்லுங்கள்.அதைச் செய்துவிட்டு, இப்படி மாட்டு வண்டியில் ஏறி விவசாயி என்று சொல்லுங்கள் என சவால் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: http://4 முனைச்சாலையில் நடந்த கோர விபத்து… சாலையை கடக்க முயன்றவர் தூக்கி வீசப்பட்ட கொடூரம்…. பதை பதைக்கும் காட்சிகள்…!

எடப்பாடி ஆட்சி தமிழகத்திற்குத் துரோகம் செய்த ஆட்சி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி. இந்த ஆட்சி – விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும். இந்த ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கொண்டாடும் திருநாள் என்றும் தெரிவித்த ஸ்டாலின், அந்த நன்னாளை உருவாக்கிட திராவிட முன்னேற்றக் கழகம் போர்ப் பரணி பாடும். தமிழகத்தில் அண்ணா மற்றும் கலைஞரின் ஆட்சியை அமைக்கும் என சூளுரைத்தார்.


Share this:

Related posts

தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படாது… தலைமை தேர்தல் ஆணையர் உறுதி…

MANIMARAN M

ரஜினியை தொடர்ந்து அரசியலுக்கு வரப்போகும் விஜய்!? சத்தமே இல்லாம நடக்கும் ரகசிய ஆலோசனை…

NEWSKADAI

‘காவி’ வலை விரிக்கும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யுங்க… முதல்வருக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்…!

AMARA

“இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்”… மத்திய, மாநில அரசுகளை விளாசிய கமல் ஹாசன்…!

MANIMARAN M

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN

#BREAKING அரசியல் கட்சி தொடங்குகிறாரா விஜய்?… வெளியானது பரபரப்பு உண்மை…!

AMARA