Newskadai.com
அரசியல்

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

Stalin
Share this:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் இன்று அதிகாலை, திருச்சி தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. கேரளா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதியாக பணியாற்றியவர். சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். அவருடைய மனைவி நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரலாக முழங்கிய முன்னாள் உச்ச் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணின் மறைவு தனது இதயத்தை நொறுக்கி விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நகரத்தார் அதிகம் வாழும் தேவகோட்டையிலிருந்து டெல்லி செங்கோட்டை வரை சென்று – உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி – பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய, முன்னாள் நீதியரசர் திரு. ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

சென்னை உயர் நீதிமன்றத்தை தொடர்ந்து ஆந்திரா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியதை நினைவு கூர்ந்துள்ள ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதியாக அமர்ந்த பின்னர், ஏ.ஆர்.லட்சுமணன் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க பரிந்துரைகளையும் குறிப்பிட்டுள்ளார். 

பெண்களுக்கு சம சொத்துரிமை வழங்குதல், பெண்கள் மீதான ஆசிட் வீச்சு போன்ற சம்பவத்திற்கு சிறப்பான பரிந்துரைகளை வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்தியை உச்ச நீதிமன்றத்தில் கட்டாயமக்க நினைத்த போது, எந்த மொழியும் எவர் மீதும் திணிக்கப்படக்கூடாது என உறுதிமிக்க வரிகள் அடங்கிய 216-வது சட்டப் பரிந்துரையை நெஞ்சுயர்த்தி வழங்கியவர் என பெருமைப்படுத்தியுள்ளார். 

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசுக்கு 299 சட்ட ஆணைய அறிக்கையை பரிந்துரைத்தது, முல்லைப் பெரியார் அணையின் பாதுகாப்பு குழுவில் இடம் பெற்று சிறப்பித்தது போன்ற ஏ.ஆர்.லட்சுமணன் மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார்.

கலைஞரின் பேரன்புக்குரியவர் என்றும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாச உணர்வுகளை பொழிந்து மகிழ்ந்ததையும் சொல்லி நெகிழ்ந்துருகிய ஸ்டாலின்,  துணைவியார் மீனாட்சி ஆச்சி இறந்து 48 மணி நேரத்திற்குள் அவர் மறைந்திருப்பது இதயத்தை நொறுங்கிப் போக வைக்கிறது என துக்கத்தை பகிர்ந்துள்ளார். மேலும் ஒரே நேரத்தில் தன் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்து துயரத்தில் மூழ்கியுள்ள- அவரது புதல்வர், மூத்த வழக்கறிஞர் திரு. ஏ.எல்.சுந்தரேசன் அவர்களுக்கும்- மறைந்த நீதியரசரின் குடும்பத்தினர் அனைவருக்கும், உறவினர்களுக்கும், அவரோடு பணியாற்றிய நீதியரசர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 


Share this:

Related posts

ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், சலூன் கடைக்காரர்களுக்கு ரூ.2000… எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…!

AMARA

“பாஜகவில் இணையவில்லை”… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிரடி விளக்கம்…!

AMARA

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மது வழங்கப்படும் – அரசின் அதிரடி அறிவிப்பு

AFRIN

அதிமுகவில் அடுத்து சிக்கப் போகும் முக்கிய பிரமுகர்… பாலியல் புகார் உடன் பாதிக்கப்பட்ட பெண் வெயிட்டிங்…!

NEWSKADAI

மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் போல… தலை சுற்ற வைக்கும் பிஎஸ்பிபி பள்ளி பேக்ரவுண்ட்…!

NEWSKADAI

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது தொடரும் பாலியல் புகார் – மற்றொரு ஆசிரியர் கைது…!

AFRIN