Newskadai.com
தமிழ்நாடு

எல்லா பணமும் கொரோனா சிகிச்சைக்கு தான்… முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி…!

MK Stalin CM
Share this:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவ வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் வாட்மேன் தங்கதுரை வரை பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியை வாரி வழங்கினர்.

ஏற்கனவே கொரோனா நிவாரண பணிக்காக பெறப்படும் நிதியையும், அதன் செலவினங்களையும் வெளிப்படையாக வெளியிடுவேன் என அறிவித்திருந்த முதல்வர் தற்போது தமிழக மக்களை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தும் விதமாக அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது முதல்வர் பொது நிவாரண நிதியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு கூறியுள்ளதாவது: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடைகளிலிருந்து, கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை

மருத்துவ நெருக்கடியும் – நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஈகையும் இரக்கமும் கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 11-5-2021 அன்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

MK Stalin CM

இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.

நேற்று (17-5-2021) வரை இணையவழி மூலமாக 29.44 கோடி ரூபாயும், நேரடியாக 39.56 கோடி ரூபாயும் என, மொத்தமாக 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளையேற்று, கொரோனா மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மனமுவந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள 69 கோடி ரூபாயிலிருந்து, ரெம்டெசிவிர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காக 25 கோடி ரூபாயும் என முதற்கட்டமாக மொத்தம் 50 கோடி ரூபாய் தொகையை செலவிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

கொரோனா குறைந்தாலும் அலட்சியம் வேண்டாம்… மத்திய, மாநில அரசுகளை அலார்ட் செய்த ஐகோர்ட்…!

NEWSKADAI

பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி… விலையில்லா புத்தகங்கள் கொடுக்கும் பணி தொடங்கியாச்சு…!!

THAVAMANI NATARAJAN

லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு…!!

AMARA

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M

“தலைமையேற்க வா”… மதுரையை தாண்டி கோவை வரை வீசும் அழகிரி அலை… பீதியில் திமுக…!!

MANIMARAN M

ஏழைகளின் நண்பன் 10 ரூபாய் டாக்டர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விரட்டி வந்த எமன்!!

NEWSKADAI