Newskadai.com
தமிழ்நாடு

+2 பொதுத்தேர்வு ரத்தா?… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசிக்கப்படும் விவகாரங்கள் என்ன?

School Girls Happy
Share this:

நாடு முழுவதும் கொரோனா தொற்று கோரதாண்டவம் ஆடி வருவதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாநில மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் வரும் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

School

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகு தேர்வை நடத்தலாமா? அல்லது மத்திய அரசு போல் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும் மொழிப்பாடங்களை தவிர்த்து, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா?, 3 மணி நேர தேர்வாக இல்லாமல் நேரத்தைக் குறைக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.


Share this:

Related posts

பிரபல ரவுடி என்கவுண்டர்… பரபரப்பில் சென்னை…

MANIMARAN M

எட்டாக் கனியான ஆன்லைன் கல்வி… கூலித் தொழிலாளர்களாக மாறி வரும் குழந்தைகள்…!!

MANIMARAN M

நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… மனம் குளிரவைத்த கோவை மாநகராட்சி…!

NEWSKADAI

சேலத்தில் முதியவர்களை முழு வீச்சில் தாக்கும் கொரோனா… மருத்துவர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை…!!

NEWSKADAI

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெறும் அறிவிப்பு தானா ? கண்ணீர் விடும் விவசாயிகள்…

MANIMARAN M

விநாயகர் சதுர்த்தி வழக்கு: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது… மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!

MANIMARAN M