Newskadai.com
அரசியல்

ஊரடங்கு நீட்டிப்பு… உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

MK Stalin
Share this:

தமிழகத்தில் கோரதாண்டவம் ஆடி வரும் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால் தொற்றின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்து பதிவானதால் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படது. ஆனாலும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காததால் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது.

எனவே மே 24ம் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க கூட வெளியே அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் மூலமாக நடமாடும் கடைகள் அமைக்கப்பட்டு காய்கறி, மளிகை, பழங்கள், முட்டை, பிரெட் ஆகிய பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. அரசின் இந்த கிடுக்குப்பிடி நடவடிக்கையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகற்ற முழு ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து சில தளர்வுகளை அறிவிக்கலாமா? அல்லது தொற்று அதிகம் உள்ள கோவை உள்ளிட்ட பகுதிகளில் தளர்வுகற்ற முழு ஊரடங்கை தொடரலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


Share this:

Related posts

இந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

AMARA

போடி போஸ்டர் விவகாரம்… சத்தமில்லாமல் ஓ.பி.எஸ். போட்ட அதிரடி உத்தரவு…!!

AMARA

எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

THAVAMANI NATARAJAN

“எடப்பாடியாரே என்றும் முதல்வர்”… ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியுடையது அல்ல…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!

AMARA

ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்…! மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சுதந்திர தின வாழ்த்து செய்தி…

MANIMARAN M

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்… தமிழக அரசுக்கு அதிரடி யோசனை கொடுத்த ராமதாஸ்…!

NEWSKADAI