Newskadai.com
தமிழ்நாடு

சென்னையில் கட்டுக்குள் வரும் கொரோனா… அமைச்சர்கள் குழு திடீர் ஆலோசனை…!!

Share this:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தீயாய் பரவி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் வரை சில மண்டலங்களில் 2000 வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது 500, 600 என அவை குறைந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு 1,01,951 ஆக உள்ளது. இதுவரை 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 அமைச்சர்களை கொண்ட குழுவை முதலமைச்சர் பழனிசாமி நியமித்திருந்தார். அதில் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்,விஜயபாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதில் மாதவரம், தண்டையார் பேட்டை, ராயபுரம் மண்டலங்களை அமைச்சர் ஜெயக்குமாரும், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களை அமைச்சர் கே.பி.அன்பழகனும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களை அமைச்சர் காமராஜும், திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களை அமைச்சர் உதயகுமாரும், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், ஆகிய மண்டலங்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் அதிகாரிகளுடன் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார், எம்ஆர் விஜயபாஸ்கர், காமராஜ், பாண்டியராஜன், விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனாவின் தீவிரம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.


Share this:

Related posts

மன்னிப்பு கேட்டால் விட்டுடுறோம்… எஸ்.வி.சேகருக்கு கெடு விதித்த காவல்துறை…!!

MANIMARAN M

விநாயகர் சதுர்த்தி வழக்கு: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது… மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!

MANIMARAN M

மேட்டூர் சுற்றுச்சுவர் விபத்து: பலியான பெண் குடும்பத்திற்கு இழப்பீடு…!

MANIMARAN M

நீட் தேர்வு கேள்வித்தாள் எப்படி இருந்தது?… மாணவர்கள் கூறிய பகீர் பதில் இதுதான்…!!

NEWSKADAI

தாய்மார்களே உஷார்: கோவையில் தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி…!!

MANIMARAN M

“எங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேணும்”… அதிரடி கோரிக்கையுடன் போராட்டத்தில் குதித்த கோவை விவசாயிகள்…!!

MANIMARAN M