Newskadai.com
தமிழ்நாடு

அடிதூள்… நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசுக்கு கடிதம்…!!

Share this:

வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜே.இ.இ. தேர்வுகளும், 13ஆம் தேதி நீட் தேர்வும் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பொது முடக்கம், பொது போக்குவரத்து முடக்கம், பள்ளி கல்லூரிகள் மூடல் போன்ற பல கட்ட நடவடிக்கைகளில் மக்கள் பெரிதும் பாதித்துள்ளர். இந்த சூழலில் நீட் ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் கூட்டத்தில், நீட், ஜே.இ.இ. தேர்வுகள் குறித்தும், ஜி.எஸ்.டி குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. பஞ்சாப், மேற்கு வங்கம், சட்டிஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, புதுச்சேரி, ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநில முதலமைச்சர்களும் கொரோனா மற்றும் பேரிடர் கால சூழலைக் கருத்தில் கொண்டும் நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்தனர். இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொரோனா சூழலை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.


Share this:

Related posts

தனியார் பள்ளிகளுக்கு வருகிறது ஆப்பு…. ஆசிரியர்களின் சம்பள விவகாரத்தில் தலையிடுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க ஆணை…!

MANIMARAN M

இந்தி திணிப்பு, முல்லை பெரியார்… முக்கிய பரிந்துரைகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்…!!

MANIMARAN M

சேலத்தில் அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… 4வது மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

கண் தெரியாத மாணவிக்கு கைகொடுத்த தொழில்நுட்பம்… தமிழக மாணவியின் அசாத்திய சாதனை…!!

MANIMARAN M

“8 முறை கோரிக்கை வைத்தும் எதுவும் கண்டுக்கல”…. போராட்டத்தில் குதித்த அரசின் முக்கிய துறை…!

THAVAMANI NATARAJAN

“இந்த ஐடியா நமக்கு வராம போச்சே ” பெண்கள் நடத்திய தினுசான போராட்டம்

MANIMARAN M