Newskadai.com
தமிழ்நாடு

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

Share this:

“ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பது பழமொழி. அதாவது வெறும் புத்தகத்தை படித்து தெரிந்து கொள்வதை விட மாணவர்கள் பயிற்சியின் மூலமாக பெறும் அறிவே அவர்களுக்கு என்றும் துணை நிற்கும் என்பதே இதன் பொருள். அதை ஊக்குவிக்கும் விதமாக பல அரசு பள்ளிகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றார் போல் பல செயல்முறை வகுப்புகள் நடத்தப்படு வருகின்றன.

மேலும் படிக்க:http://கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

அதிலும் குறிப்பாக இன்றைய மாணவர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய விவசாயம் குறித்து விளக்கும் வண்ணம், பள்ளி வளாகங்களிலேயே காய்கறி தோட்டம், மரம் வளர்ப்பு ஆகியன பற்றி ஆசிரியர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். தங்களது சத்துணவிற்கு தேவையான காய்கறிகளை பள்ளி வளாகத்திலேயே விளைவிப்பது, பிறந்த நாள் என்றால் மரம் நட்டுவது என அரசு பள்ளிகளில் இயற்கையின் முக்கியத்துவம் குறித்து வெறும் புத்தக போதனை மட்டும் நடத்தாமல், அதில் மாணவர்களை நேரடியாக ஈடுபட வைக்கிறார்கள்.

மேலும் படிக்க:http://வேதா நிலையம் #81 போயஸ் கார்டன்….

அப்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து வளர்த்து வந்த வாழை மரங்கள் தற்போது பச்சை பசேலென தோப்பாக மாறியுள்ளது. புத்தகத்தில் உள்ளதை மட்டும் போதித்து விட்டு செல்லாமல் மாணவர்களுக்கு இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்திய அப்பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், புத்தக கல்வியோடு விவசாயம் & இயற்கை பாதுகாப்பு குறித்த நல்லெண்ணங்களை மாணவர்களின் மனங்களில் விதைக்கும் நோக்கோடு, மரம் வளர்ப்பு, காய்கறி தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஊக்கப்படுத்தும் நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் புதுமையான முயற்சியை உற்சாகப்படுத்தியுள்ளார்.


Share this:

Related posts

பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு… பவானிஸ்வரர் கோவிலுக்கு அபாய எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN

சேலத்தை கதறவிடும் ‘கொரோனா’… 136 இடங்களில் இன்று மருத்துவ முகாம்…!!

THAVAMANI NATARAJAN

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M

வைகை அணையை திறந்துவிட அதிரடி உத்தரவிட்ட முதல்வர்… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

THAVAMANI NATARAJAN

கொரோனா தொற்று இல்லை… நலமுடன் இருக்கிறார் நல்லகண்ணு…

MANIMARAN M

அபராதம் கேட்டு அடாவடி செய்த பேரூராட்சி ஊழியர்கள்… கொரோனா லாக்டவுன்னில் அதிகரிக்கும் கொடுமை

THAVAMANI NATARAJAN