Newskadai.com
அரசியல்

“வழிகாட்டுதல் குழுவில் இல்லாதது மகிழ்ச்சியளிக்கிறது” : அதிரடியாக தெரிவித்த மூத்த அமைச்சர்…!!!

Share this:

வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த 7ஆம் தேதி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வழிக்காட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்ற அதிமுக ஒருங்கிணைப்பாளரின் கோரிக்கையை முதலில் ஏற்க மறுத்த இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பின்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்பிறகே கடந்த 7 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார்.

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த குழுவில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சிவி சன்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ், பாண்டியன், மோகன், கோபல கிருஷ்ணன்மற்றும் சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றனர்.

இதில் தம்பிதுரை, அன்வர் ராஜா, செங்கோட்டையன், போன்ற அதிமுகவின் மூத்த தலைவர்கள் இல்லாததால் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கோபிசெட்டிப்பாளையம் கொடிவேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறாதது மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

“இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை”… பேரவையில் உறுதி அளித்த முதல்வர்…!!

MANIMARAN M

அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரம் போடும் விஜய்… ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பிறப்பித்த கட்டளைகள்…!

AMARA

கை விரித்த பாஜக… மீண்டும் திமுகவிற்கு திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ…!

NEWSKADAI

#BREAKING கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு வழக்கில் அதிரடி… காதல் மனைவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை…!

NEWSKADAI

ஓ.பி.எஸ். மகன் பதவிக்கு ஆபத்து?… தேனி எம்.பி. ரவீந்திரநாத் வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

MANIMARAN M

“திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது”… அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கு.க.செல்வம்…!!

NEWSKADAI