Newskadai.com
சினிமா

திரையரங்குகள் திறக்கபடுமா..? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்…

Share this:

கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக 7 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மத்திய மாநில அரசுகள் பொது மக்கள் நலன் கருதி சில தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் சில கட்டுபாடுகளுடன் இயங்கவும், நகர்ப்புறங்களில் உள்ள சிறிய வழிபாட்டுத் தளங்களை திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், திரையரங்குகளை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக அரசிடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

திரையரங்குகள் திறக்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தவித அறிவிப்புகளும் வெளிவரவில்லை. இந்நிலையில், கோவில்பட்டி கடம்பூரில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக அரசு இதுவரை திரையரங்குகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கொரோனாவின் தாக்கம் குறைந்த பிறகே திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு முதலமைச்சர் முடிவு எடுப்பார் என தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

“என் இனிய தமிழக அரசே…” பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்

MANIMARAN M

இதோ… வெளியானது பிக்பாஸ் சீசன் 4 2nd புரோமோ.. இந்த முறை பேசியிருக்குறது கமல் இல்ல…!!

AMARA

அடுத்த அதிர்ச்சி… கொரோனாவால் பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

AMARA

சூர்யாவிற்கு துணை நிற்கும் அஜித், தனுஷ், ஜெயம் ரவி… போஸ்டர் ஓட்டி தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!

AMARA

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்… முன்னணி இயக்குநர்கள் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்..!!

THAVAMANI NATARAJAN

தொடர்ந்து கவலைக்கிடம்… எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான அறிக்கை…!!

AMARA