Newskadai.com
சினிமா

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

Share this:

உலக பெருந்தொற்று கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பொது ஊரடங்கு அமல்படுத்தபட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசால் சில சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வழிபாட்டுதலங்கள் திறப்பதற்கும், மாவட்டங்களுக்குள்ளான பொது போக்குவரத்துக்கும் அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாநிலத்திற்குள்ளான ரயில் சேவைக்கும் அனுமதியளித்துள்ளது.

ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் யாவற்றிற்கும் தடை நீட்டிக்கபட்டுள்ளது. அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து திரைப்பட படபிடிப்புக்கும் அனுமதியளித்துள்ளது. இதற்கிடையில் திரையரங்குகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

வரும் திங்கள்கிழமை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜாவும், பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணியும் தமிழகத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததற்கும், திரைப்பட தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியதற்கும் நன்றி தெரிவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவுள்ளனர். அந்த சந்திப்பின்போது திரையரங்கு திறப்பது குறித்து நல்ல முடிவு வெளிவரும் என்று அமைச்சர் கூறினார்.


Share this:

Related posts

கொலையா? தற்கொலையா?… சிபிஐ கைக்கு போன சுஷாந்த் மரண வழக்கு…!!

MANIMARAN M

சென்னை வீட்டில் எஸ்.பி.பி. உடல் அஞ்சலிக்காக வைப்பு… ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி…!

NEWSKADAI

“ஹிந்தி தெரியாது போடா”… கெத்தாக எதிர்ப்புகாட்டும் தமிழ் சினிமா பிரபலங்கள்..!!

MANIMARAN M

முதலில் அம்மா, நேற்று அப்பா கொரோனாவால் பலி… அதிர்ச்சியில் பிரபல நடிகை…!

THAVAMANI NATARAJAN

ஆசிர்வாதம் கிடைத்தது… அற்புதம் நடந்தது… ரஜினி குரலைக் கேட்டு புத்துயிர் பெற்ற ரசிகர்…!

THAVAMANI NATARAJAN

பிரதமரையே அதிர்ச்சியடைய வைத்த பிரபல பாடகரின் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

AMARA