கும்பகோண மக்கள் கடந்த 27 ஆண்டுகளாக கும்பகோணத்தையும் தனி மாவட்டமாக அறிவிக்க கோரி நீண்ட நாள் கோரிக்கை வைத்து மக்கள், பல போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். இதை தொடர்ந்த கடந்த வாரம் ஞாயிற்று கிழமை 9ம் தேதி காலை 9 மணிக்கு கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி “கும்பகோணம் டூ பி டிஸ்டிரிக்ட்” என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது.
மேலும் படிக்க:http://தனி மாவட்டமாக உருவாகிறதா கும்பகோணம்?… வெற்றி இலக்கை எட்டப்போகும் நீண்ட போராட்டம்…!!
இந்த ஹேஷ்டேக் திரையுலக பிரபலங்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் ஹன்சிகா பிறந்த நாள் ஹேஷ்டேகை பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது, அன்று இந்த ஹேஷ்டேக் சென்னையளவில் முதலிடத்தையும் இந்திய அளவில் 12 வது இடத்தையும் பிடித்து 9ம் தேதி ஞாயிற்றுகிழமை முழுவதும் டிரெண்டிங் ஆனது இதுவே முதல் முறையாகும். இந்த ஹேஷ்டேக் மொத்தம் 60,88 பேர் டிரெண்டிங் செய்ததால் புதிய சாதனையை படைத்து குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:http://பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெறும் அறிவிப்பு தானா ? கண்ணீர் விடும் விவசாயிகள்…
கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சியில் அ.தி.மு.க சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களிடம் ”கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை வலுப்பெற்று வருவது குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். இதுகுறித்து முதல்வர் நல்லதொரு முடிவை எடுப்பார்” என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.