Newskadai.com
தமிழ்நாடு

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

tamilnadu students
Share this:

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: 12ம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய அரசிடம் இன்று வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறிய அவர், முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பிறகு அதிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Anbil Mahesh

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி 3 தொகுதிகளாக தேர்வு நடைபெறும், அதில் எந்த மாற்றமும் இருக்க கூடாது என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மேலும், இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறுமா என்பது குறித்து இன்று மாலை தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாணவர் / மாணவி தேர்வுக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் தேர்வு மையத்துக்கு வந்து மீண்டும் வீடு திரும்பும் வரை அரசின் பொறுப்பு முழுமையாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆகவே, அதனை எல்லாம் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்

நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றம் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றிய பின்பு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Share this:

Related posts

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்… அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை…!!

MANIMARAN M

இ-பாஸ் பெறுவதை எளிமையாக்க குழுக்கள் அமைப்பு… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி உத்தரவு…!!

POONKUZHALI

தமிழகத்திற்கு கைக்கொடுக்கும் நெதர்லாந்து – கண்டெய்னரில் இறக்குமதியாகும் ஆக்சிஜன்

MANIMARAN M

மீண்டும் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு

AFRIN

மக்களே உஷார்….‘உயிருக்கே ஆபத்து’… ஆவி பிடிப்பது குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை…!

AMARA

பிரபல கார் நிறுவனத்திற்கு நீதிமன்றம் வைத்த ‘குட்டு’… தமிழக அரசுக்கும் அதிரடி உத்தரவு!

AMARA