Newskadai.com
அரசியல்

ஆன்லைனில் வகுப்பில் பாலியல் தொல்லை… பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு…!

Share this:

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரை நிர்வாணமாக வந்து ஆன்லைன் கிளாஸ் எடுப்பது, மாணவிகளுக்கு ஆபாச மெசெஜ் அனுப்புவது என எல்லை மீறிய ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ஆன்லைன் வகுப்புகளுக்கு நெறிமுறைகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை இவ்வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணை நடத்திய பின்பு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Rajagobalan PSBB School

ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை யாரும் பின்பற்றவில்லை என்பது இவ்விவகாரம் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், மீண்டும் ஒருமுறை வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.

பாலியல் குற்றச்சாட்டு புகார்களை பதிவு செய்ய/விசாரிக்க ஒரு குழு அமைக்க அரசு ஆலோசித்துள்ளதாக கூறிய அவர், ஒரு நல்ல ஆசிரியரும் இதுபோன்ற புகார்களால் பாதிக்க கூடாது என்பதிலும் அரசு உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.

ஆன்லைன் வகுப்புகளில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறும் என்பதே இச்சம்பவத்திற்கு பின்பு தான் தெரியவந்துள்ளதாக கூறிய அவர், இது எங்களுக்கு ஒரு பாடம் என்றும், ஆதலால் இனிவரும் நாட்களில் நாங்கள் கவனமாக செயல்படுவோம் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.

Anbil Mahesh

நாங்களும் இதுப்போன்ற பாதிப்பை சந்தித்து உள்ளதாக முன்னாள் மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்றும், அவர்கள் நேரடியாக வந்து புகார் தெரிவித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் சி.பி.எஸ்.இ பள்ளியில் பணிபுரிவதால், மாநில அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட அவர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் விசாக கமிட்டி அமைக்க அரசு ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.


Share this:

Related posts

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

ஊரடங்கு நீட்டிப்பு… உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

NEWSKADAI

திமுக முன்னாள் அமைச்சர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்டவரை கொண்டு சென்ற எமன்…!!

AMARA

பாஜகவில் அடியெடுத்து வைத்த உடனேயே இப்படியா?…. அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு…!!

NEWSKADAI

நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…!!

MANIMARAN M

தமிழகத்திற்கு கைக்கொடுக்கும் நெதர்லாந்து – கண்டெய்னரில் இறக்குமதியாகும் ஆக்சிஜன்

MANIMARAN M