Newskadai.com
அரசியல்

எம்.ஜி.ஆர். குடும்பத்தில் ‘கொரோனா’ மரணம்… சோகத்தில் துடிதுடிக்கும் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்…!

Share this:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரனான எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்த செய்தி அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியின் மகன் எம்.சி. சந்திரன் (75) கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

சகோதரர் சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

கொரோனாவுக்கு பலியானார் காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார்… சோகத்தில் மூழ்கியது காங்கிரஸ்…!!

NEWSKADAI

போடி போஸ்டர் விவகாரம்… சத்தமில்லாமல் ஓ.பி.எஸ். போட்ட அதிரடி உத்தரவு…!!

AMARA

“தமிழகம் முழுவதும் 500 துணை மின் நிலையங்கள்”… பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்…!!

MANIMARAN M

“திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது”… அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கு.க.செல்வம்…!!

NEWSKADAI

தேனியில் போஸ்டர்… ஓபிஎஸ் – இபிஎஸ் வீடுகளில் மாறி, மாறி அமைச்சர்கள் ஆலோசனை… அதிமுகவில் பதற்றம்…!!

AMARA

கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது சட்டமன்ற கூட்டத் தொடர்…

MANIMARAN M