Newskadai.com
சினிமா

“மீண்டும் கவலைக்கிடம்”… எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து வெளியான மருத்துவ அறிக்கை…!!

SPB
Share this:

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தன்னை மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள கூறியதாகவும், ஆனால் குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறினார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 14ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நலம் திடீர் என்று மோசமடைந்து விட்டதாகவும், மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் எஸ்.பி.பி. நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்தனர்.

ஆனால் கடந்த சனிக்கிழமை முதலே அவர் தீவிர சிகிச்சையில் இருந்தாலும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது. சற்று முன் எஸ்.பி.பி.யின் மகன் சரண் வெளியிட்ட வீடியோவில் கூட, அப்பா அதே நிலையில் நீடிப்பதாகவும், ஆனால் புதிதாக எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்தார். அதை மருத்துவர்கள் நல்ல அடையாளமாக பார்க்கிறார்கள். உங்களுடைய பிரார்த்தனைகள், வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். அப்பா சீக்கிரம் மீண்டு வருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது அவருடைய குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

இயக்குநர் அட்லி வீட்டில் திடீர் மரணம்… துடிதுடிக்கும் சோகத்துடன் பகிர்ந்த உருக்கமான பதிவு…!!

AMARA

இதுவா ரஜினியின் “அண்ணாத்த” பட கதை?…. செம்ம கேவலமா இருக்கே என தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்…!!

NEWSKADAI

முதலில் அம்மா, நேற்று அப்பா கொரோனாவால் பலி… அதிர்ச்சியில் பிரபல நடிகை…!

THAVAMANI NATARAJAN

தமன்னாவின் பெற்றோருக்கு உறுதியானது கொரோனா தொற்று… கலக்கத்துடன் வெளியிட்ட அறிக்கை…!

NEWSKADAI

“10 லட்சம் குடும்பத்தை காப்பாத்துங்க”… முதல்வரிடம் கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

அமைதியாக இருந்த அஜித்தையே சீண்டிவிட்டாங்களே… வெகுண்டெழுந்து வெளியிட்ட அதிரடி அறிக்கை…!

AMARA