Newskadai.com
சினிமா

அபாய கட்டத்தில் எஸ்.பி.பி… தீவிர ஆலோசனையில் மருத்துவர்கள்… தற்போதைய நிலவரம் என்ன?

Share this:

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென எஸ்.பி.பி.யின் உடல் நிலை மோசமடைந்தது. தனது குரலால் மக்களை மகிழ்வித்த இசை அரசன் எஸ்.பி.பி. பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20ம் தேதி அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை நடத்தினர்.

திரைத்துறையினர் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களின் தூய்மையான அன்பு மற்றும் பிரார்த்தனையால் எஸ்.பி.பி. இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தார். தற்போது மயக்கத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை தொடர்வதாகவும், இயல்பான கூழ்ம உணவுகளை எஸ்.பி.பி. எடுத்துக்கொள்வதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் எஸ்.பி.பி.சரண் வெளியிட்ட பதிவில் கூட அப்பா வீடு திரும்ப மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார் என கூறியிருந்தார். இதனால் அவருடைய உடல் நிலை நல்ல முறையில் தேறிவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நேற்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி.யின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், தற்போது உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எம்.ஜி.எம். மருத்துவமனையின் சிறந்த மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். எஸ்.பி.பி உடல்நிலை தேறிவிட்டார் என்ற மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களும், திரையுலகினரும் தற்போது மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

SPB
SPB

இதனிடையே எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நெருங்கிய நண்பரான உலக நாயகன் கமல் ஹாசன், அவர் சிகிச்சை பெற்று வரும் சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டருக்கு அவசர, அவசரமாக விரைந்தார். அங்கு மருத்துவர்களிடம் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நலமாக இருக்கிறார் என சொல்ல முடியாது தழுதழுத்த குரலில் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து தினமும் ரசிகர்களுக்கும், மீடியாக்களும் கூறி வரும் அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் தற்போது மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்பாவின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் குழு அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


Share this:

Related posts

“வடிவேல்” பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…. நிதியுதவி…!!

THAVAMANI NATARAJAN

“உயிருக்கு மிகவும் ஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி”… மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

AMARA

#BREAKING : “800 படம் பற்றி இனி பேசுவதற்கு எதுவும் இல்லை”… அரசியல் அலைகழிப்பால் நொந்துபோன விஜய் சேதுபதி…!

NEWSKADAI

சூப்பர் ஸ்டாருக்கு சவால் விடும் கேஜிஎஃப் ‘ராக்கி பாய்’… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

THAVAMANI NATARAJAN

எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

NEWSKADAI

கொரோனா உடையில் சூடான நடிகை மீனா… வைரலாகும் புகைப்படங்கள்…!

THAVAMANI NATARAJAN