சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள புதுச்சாம்பள்ளியில் ரயில்வே இருப்புப்பாதை சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் கட்டுமான பணி நடைபெற்று வந்தபொழுது, பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கிய கவிதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்த கவிதா குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.