Newskadai.com
தமிழ்நாடு

கொட்டித் தீர்க்கும் பருவ மழை… விவசாயிக்கு சாதகமா…? பாதகமா…?

Share this:

தென்மேற்கு பருவமழை சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கொட்டி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் தண்ணீர் தேக்கம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடக அணைகளிலிந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் பகுதியில் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக அணைகளின் நீர் மட்ட அளவு அதிகரித்து வரும் நிலையில், கபினி அணையில் 60,000 கன அடியில் இருந்து 70,000 கன அடியாகவும், கே.ஆர்.எஸ் அணையில் 30,000 கன அடியில் இருந்து 74,000 அடியாகவும் நீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக இருந்தது. அணையில் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 1 லட்சம் கன அடியில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் தண்ணீர் இருப்பு நிலை 43.06 டிஎம்சி-யாக உள்ளது. அணையின் நீர்மட்டமானது ஒரே நாளில் 11.8 அடி அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 86.91 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் காவிரியிலிருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளவு 120 அடியை வரும் வாரங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

தாய்மார்களே உஷார்: கோவையில் தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி…!!

MANIMARAN M

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M

குஷ்புவுக்கு போட்டியாக மோடி… சேலத்தில் தூள் பறக்கும் போஸ்டர்கள்…!

MANIMARAN M

“ஸ்டிரைக் செஞ்சா சம்பளம் கிடையாது”… ரேஷன் கடை ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை..!!

MANIMARAN M

ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக்கொண்டார் பன்வாரிலால் புரோகித்….!!

NEWSKADAI

செப்.22 முதல் அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்…

MANIMARAN M