Newskadai.com
தமிழ்நாடு

ஒரே ஆண்டில் 2வது முறை… அடித்து தூக்கிய மேட்டூர் அணை…!!

Mettur Dam
Share this:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மித மற்றும் கன மழை பெய்துவருவதால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டின் கடந்த செப்டம்பர் 25 ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் செஞ்சூரி அடித்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு சீராக இருந்த காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 308 நாட்களாக 100 அடிக்கு கீழே குறையாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கடந்த 3 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

மேலும் படிக்க: கேன்சரால் மனைவி மரணம்… துக்கம் தாங்காமல் தூக்கில் தொங்கி கணவர் தற்கொலை…!

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 27,212 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 99.90 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14.000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் இன்று நண்பகலில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக செஞ்சூரி அடித்துள்ளது.


Share this:

Related posts

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்…!

NEWSKADAI

நாகையில் கோவில், குளம், பள்ளிகளை காலி செய்யப்போகும் சாலைப்பணி… ஆட்சியரிடம் மன்றாடிய மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்… விதிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

MANIMARAN M

மேட்டூரில் பாம்பை வெட்டி விருந்து சமைத்த  இளைஞர்கள்… வலைவீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN

கோயம்பேடு மார்க்கெட் திறந்தாச்சு. வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு

NEWSKADAI