Newskadai.com
தமிழ்நாடு

டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு…!

Mettur Dam
Share this:

ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது. எனவே மேட்டூர் அணையின் வரலாற்றில் 88 ஆவது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், “மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதல்வர் முன்னதாக இம்மாதம் நீர்வளத் துறை அமைச்சர், வேளாண்மை மற்றும் விவசாயிகள் துறை அமைச்சர், வோளாண்மைத் துறை செயலாளர் ஆகியோருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

DMK

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணையின் தற்போதைய நீர்மட்டம், டெல்டா பாசன விவசாயிகளின் தேவை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார்.

மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு, 3-6-2021 அன்று நிலவரப்படி 97.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61.43 டிஎம்சி ஆகவும் உள்ளது. நடப்பாண்டு (2021-2022) தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் (2.11 லட்சம் ஹெக்டேர்) நிலங்கள் பாசன வசதிபெறும்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகளை விவசாய பெருங்குடி மக்களை கலந்தாலோசித்து, இந்தாண்டு முறையாக மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி, டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம், அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க இயலும். இவ்வாண்டு விவசாயப் பணிகளுக்குத் தேவையான விதை நெல், உரங்கள், பூச்சி மருந்து மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

எங்க ஜாதி பெயரை கெடுக்கிறீங்களா?… ராஜகோபாலன் தப்ப செய்யலைன்னு நிரூபிக்கப்பட்டால்… சவால் விடும் மதுவந்தி…!

AMARA

தமிழகத்தில் அதிர்ச்சி… ஒரே நாளில் கொரோனாவுக்கு 119 பேர் பலி…!!

AMARA

உங்க ஏரியாவில் பால் கிடைக்கலையா?… உடனே இந்த நெம்பருக்கு போன் போடுங்க… அசத்தும் அமைச்சர்…!

AMARA

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே… தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர் நீதிமன்றம்…!!

AMARA

மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய செவிலியர்… ஜிப்மர் மருத்துவமனையில் வெடித்தது போராட்டம்…!!

MANIMARAN M

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர்..! நடந்தது என்ன..?

MANIMARAN M